Election bannerElection banner
Published:Updated:

`கோவையில் பின்னடைவை சந்தித்த திமுக' - ஷாக் கொடுத்த ம.நீ.ம!

கமல் , மகேந்திரன்
கமல் , மகேந்திரன்

கோவை மாநகர் பகுதிகளான கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது. இதற்கு ம.நீ.ம வாங்கிய வாக்குகள் முக்கிய காரணம்.

கோவை மாவட்டம் அ.தி.மு.கவின் கோட்டை என்பதை இந்த சட்டசபை தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று வருகிறது. முக்கியமாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த முதல் தேர்தலிலேயே ம.நீ.ம கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெற்றது. கோவை மக்களவை தொகுதியில் டாக்டர் மகேந்திரன் 1.50 லட்சம் வாக்குகளை பெற்றார். அப்போது ம.நீ.ம பெற்ற வாக்குகள் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணிக்கு பின்னடைவாக இருந்தது. இந்தத் தேர்தலில் ம.நீ்.ம பெற்ற வாக்குகள் கோவையில் தி.மு.க கூட்டணிக்கு பின்னடைவாகியுள்ளது.

மகேந்திரன்
மகேந்திரன்

கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து கடும் போட்டி அளித்து வரும் நிலையில், மற்ற பகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் டீசன்டான வாக்குகளை பெற்றுள்ளனர். கோவை மாநகர் பகுதிகளான கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது. இதற்கு ம.நீ.ம வாங்கிய வாக்குகள் முக்கிய காரணம்.

கோவை வடக்கு தொகுதியில் தி.மு.க அ.தி.மு.க வேட்பாளர்கள் இடையே 974 வாக்குகள் தான் வித்தியாசம். ஆனால், இங்கு ம.நீ.ம வேட்பாளர் தங்கவேலு 14,433 வாக்குகள் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க இடையே 12,000 வாக்குகள் வித்தியாசம். ஆனால், இங்கு ம.நீ.ம வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் 35,000 வாக்குகள் பெற்றுள்ளார்.

கவுண்டம்பாளையம் ம.நீ.ம வேட்பாளர் சுரபி பங்கஜ்
கவுண்டம்பாளையம் ம.நீ.ம வேட்பாளர் சுரபி பங்கஜ்

கவுண்டம்பாளையம் தொகுதியிலும் தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க, தி.மு.க இடையே 11,640 வாக்குகள் வித்தியாசம். இங்கு ம.நீ.ம வேட்பாளர் பங்கஜ் ஜெயின் 16,000 வாக்குகளை பெற்றுள்ளார். இப்படி ம.நீ்ம-வின் திடீர் எழுச்சி தி.மு.க வெற்றிக்கு முட்டுக்கட்டை போட காரணமாகிவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு