Published:Updated:

``நான் இறந்துவிட்டதாக என்னிடமே சொல்கிறார்கள்..!"- வாக்களிக்கச் சென்ற முதியவருக்கு அதிர்ச்சி

- வாக்காளர்

`` `உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இறந்தவர்களின் பட்டியலில்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் வாக்களிக்க முடியாது' எனக் கூறிவிட்டார்கள்." - முதியவர்

``நான் இறந்துவிட்டதாக என்னிடமே சொல்கிறார்கள்..!"- வாக்களிக்கச் சென்ற முதியவருக்கு அதிர்ச்சி

`` `உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இறந்தவர்களின் பட்டியலில்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் வாக்களிக்க முடியாது' எனக் கூறிவிட்டார்கள்." - முதியவர்

Published:Updated:
- வாக்காளர்

டெல்லி மாநகராட்சித் தேர்தல் நேற்று (டிசம்பர் 4-ம் தேதி) நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், நேற்று 67 வயது முதியவர் ஜெய்பால் முகர்ஜி என்பவர் வாக்களிக்கச் சென்றிருக்கிறார். அப்போது தேர்தல் அதிகாரிகள் `உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இறந்தவர்களின் பட்டியலில்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் வாக்களிக்க முடியாது' எனக் கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

டெல்லி
டெல்லி

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் ஜெய்பால் முகர்ஜி, "நான் இறந்துவிட்டதாக என்னிடமே சொல்கிறார்கள். ஒருவேளை எனக்குத்தான் தவறாகப் புரிந்துவிட்டதோ என மறுமுறையும் சென்றேன். அப்போதுதான் நான் இறந்துவிட்டதாக உறுதியாகக் கூறினார்கள். அவர்களின் ஆவணங்களின்படி நான் இறந்துவிட்டேன். தேர்தல் அதிகாரியிடம் எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய சகோதரர் ஜெய்கிஷன்தான் இறந்துபோனார் என்று தெரிவித்தேன். என் சகோதரனின் பெயரும் அந்தப் பட்டியலில் இல்லை என்று கூறப்பட்டது.

தேர்தல்
தேர்தல்

ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட என் தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இதுபோல டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதைக் தெரிந்துகொண்டோம். எல்லோரும் சேர்ந்து தேர்தல் ஆணையத்துக்குப் புகார்க் கடிதம் எழுதி அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.