Published:Updated:

மயிலாடுதுறை: அதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்! - பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் சோகம்

அன்னதாட்சி

தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று (11.02.2022) காலை அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். மதியம் உணவு அருந்திய பிறகு மாலையில் அவர் சின்னமாரியம்மன் கோயிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்.

மயிலாடுதுறை, தருமபுரம் சாலையைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (வயது 64). இவர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்காக மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டுவந்தார். நேற்று காலை வரை அன்னதாட்சி அதிமுக தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்திருக்கிறார்.

அன்னதாட்சி -   வேட்பாளர்
அன்னதாட்சி - வேட்பாளர்

தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று (11.02.2022) காலை அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதமிருந்திருக்கிறார். மதியம் உணவு அருந்திய பிறகு மாலையில் அவர் சின்னமாரியம்மன் கோயிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். பூஜையில் கலந்துகொண்டிருந்தபோதே அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அன்னதாட்சியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் அ.தி.மு.க வேட்பாளர் அன்னதாட்சி இறந்துபோனதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.