Published:Updated:

Election Results Live: திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!

திரிபுரா
Live Update
திரிபுரா

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

02 Mar 2023 9 AM
02 Mar 2023 7 PM

திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!

திரிபுரா
திரிபுரா

திரிபுராவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க 32 இடங்களிலும், திப்ரா மோத்தா 12 இடங்களிலும், சி.பி.ஐ(எம்) 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 32 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது.

02 Mar 2023 1 PM

கமலாலயத்தில் பா.ஜ.க கொண்டாட்டம்!

மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகிறது. இதில் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில், சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க-வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

02 Mar 2023 1 PM

திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க முன்னிலை!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நாகாலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், பா.ஜ.க 39 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது.

திரிபுரா
திரிபுரா

மேகாலயாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சிக்கும் தற்போதைய நிலையில் பெரும்பான்மை இல்லை. திரிபுரா மாநிலத்தில், நடுவில் சறுக்கிய பா.ஜ.க தற்போது மீண்டும் முன்னிலையில் இருக்கிறது. தற்போது பா.ஜ.க அம்மாநிலத்தில் 34 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

02 Mar 2023 10 AM

`திரிபுரா தேர்தலில் மாறும் காட்சிகள்’ - பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களில் பா.ஜ.க முன்னிலை!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நாகாலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், பா.ஜ.க 40 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது.

Election Results Live: திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!

மேகாலயாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சிக்கும் தற்போதைய நிலையில் பெரும்பான்மை இல்லை. திரிபுரா மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்களுக்கும் அதிகமான இடத்தில் பா.ஜ.க முன்னிலையில் (36 இடங்கள் வரை) இருந்தது. தற்போது பா.ஜ.க கூட்டணி 29 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், தற்போது இந்தத் தேர்தலில் முதன் முதலாக களமிறங்கிய திப்ரா மோத்தா கட்சி(Tipra Motha) 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட கட்சியாக இந்தக் கட்சி மாறியிருக்கிறது.

2018 தேர்தலில் பா.ஜ.க 36 இடங்களைக் கைப்பற்றி, 35 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

02 Mar 2023 10 AM

திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க ஆட்சி; மேகாலயாவில் இழுபறி!

திரிபுராவில் 35 இடங்களிலும், நாகலாந்தில் 37 இடங்களிலும் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.

பாஜக
பாஜக

மேகாலயாவில் இதுவரை எந்தக் கட்சியும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையைத் தாண்டவில்லை. அங்கு இழுபறி நீடித்துவருகிறது.

02 Mar 2023 10 AM

திரிபுராவில் பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை

திரிபுராவில் புதிதாக உருவான திப்ரா மோத்தா கட்சி (Tipra Motha Party) ஒன்பது இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

3 மாநில தேர்தல்
3 மாநில தேர்தல்
ANI

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று தெரியவரும்.

02 Mar 2023 9 AM

மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை!

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 24 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

விறுவிறு வாக்குப்பதிவு
விறுவிறு வாக்குப்பதிவு
ANI

மேகாலயா மாநிலத்தில் எந்தக் கட்சியும் இதுவரை தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கடும் போட்டி நிலவி வருகிறது.

02 Mar 2023 9 AM

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க!

திரிபுரா, நாகாலாந்து மாநிலத்தில் பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
ANI

திரிபுராவில் தற்போது முதலமைச்சர் மாணிக் சகா (Manik Saha) தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. நாகாலாந்தில் முதலமைச்சர் நைபியு ரியோ (Neiphiu Rio) தலைமையில் என்.டி.பி.பி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

02 Mar 2023 8 AM

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட அந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியிருக்கிறது.

02 Mar 2023 8 AM

திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை! 

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நாகாலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் இருக்கிற நிலையில், பா.ஜ.க 34 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

பாஜக
பாஜக

திரிபுராவிலும் 60 தொகுதிகள் இருக்கின்ற நிலையில் பா.ஜ.க 39 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

02 Mar 2023 8 AM

மேகாலயாவில் ஆளுங்கட்சி முன்னிலை

மேகாலயாவில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
ANI

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கும் நிலையில், மேகாலயாவில் ஆளுங்கட்சி  முன்னிலை வகிக்கிறது.

02 Mar 2023 8 AM

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க கூட்டணி 20 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.

பாஜக
பாஜக

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 3 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகாலாந்திலும் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

02 Mar 2023 7 AM

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா - தேர்தல் முடிவுகள்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. திரிபுரா மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), அதாவது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரையில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), ஆட்சி நடைபெறுகிறது. இந்த 3 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

Election Results Live: திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!

இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த மாதம் 16-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்தமாதம் 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மேகாலயா மாநிலத்தில் சோகியோங் என்னும் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.