Published:Updated:

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

collector Shilpa Prabakar Sathish
News
collector Shilpa Prabakar Sathish

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

collector press meet
collector press meet

அப்போது பேசிய அவர், ``நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி தொகுதியில் 1,27,025 ஆண் வாக்காளர்களும் 1,29,385 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் இந்தத் தொகுதியில், 2,56,414 வாக்காளர்கள் உள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

299 வாக்குச்சாவடிகளைக் கொண்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்தத் தொகுதிக்காக 719 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள், 30 நிலையான படையினர் மூலமாக பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணி நடைபெறும்.

collector in press meet
collector in press meet

நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வரும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தினமும் காலை 11 முதல் 3மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்தத் தொகுதியில் 1,231 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால், அவர்கள் எந்தெந்த வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்கிறார்கள் என்பதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.