Published:Updated:

`டி.எம்.கே-னா டி.எம்.கதிர் ஆனந்த் என்றும் அர்த்தம்!’- உதயநிதி சொன்ன புது விளக்கம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்
பிரபாகரன் செ

``டி.எம்.கே என்றால் தி.மு.க என்பது மட்டும் பொருளல்ல, டி.எம்.கதிர் ஆனந்த் என்பதையும் குறிக்கும். மோடியின் இரண்டு அடிமைகள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்று மக்களே சொல்வார்கள்’’ என்று தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்குப் போகும் இடங்களில் சாலையோரக் கடையில் டீ குடித்து செல்ஃபி எடுத்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினார். 

ஸ்டாலின்
ஸ்டாலின்

தந்தையின் பாணியில் உதயநிதி ஸ்டாலினும் பிரசார இடங்களில் கூலித் தொழிலாளர்களைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது, செல்ஃபி எடுத்துக்கொள்வது என அசத்தினார். வாணியம்பாடி அம்பலூரில் தேங்காய் உரிப்பதைப்போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின். 

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், ``தந்தை சின்ன நடிகரு... மகன் மாஸ் ஹீரோங்க...’’ என்று கலாய்த்தனர். பிரசார களத்தில் உதயநிதி பேசுகையில், ``தமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று பொதுமக்களிடம் கேட்டால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்று ‘டக்’ என்று பெயரைச் சொல்வார்கள். 

உதயநிதி
உதயநிதி

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தி.மு.க கூட்டணிக்குத் தமிழக மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். தமிழக மக்கள் மோடிக்கும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸுக்கும் சரியான பதிலடி கொடுத்தனர். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

நான் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். டி.எம்.கே என்றால் தி.மு.க என்பது மட்டும் பொருளல்ல, டி.எம்.கதிர் ஆனந்த் என்பதையும் குறிக்கும். 

பிரசாரத்தில் உதயநிதி
பிரசாரத்தில் உதயநிதி

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால் கதிர் ஆனந்த் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வரும் 5-ம் தேதி நீங்கள் ஓட்டு போடுங்கள். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தினம். வேலூர் வெற்றியை அவருக்குக் காணிக்கையாக செலுத்துவோம்’’ என்றார்.