Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: நீலகிரியை மொத்தமாகக் கைப்பற்றிய திமுக! - தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை

ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் இடையே 13 இடங்களில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளே பெரும்பாலான வார்டுகளில் வெற்றிபெற்றன.

உள்ளாட்சித் தேர்தல்: நீலகிரியை மொத்தமாகக் கைப்பற்றிய திமுக! - தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை

மிகுந்த எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் இடையே 13 இடங்களில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளே பெரும்பாலான வார்டுகளில் வெற்றிபெற்றன.

Published:Updated:
ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம்‌ தேதி நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் இடையே 13 இடங்களில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெரும்பாலான வார்டுகளில் வெற்றிபெற்றன.

ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்
ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்

மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் தி.மு.க 20 வார்டுகளைக் கைப்பற்றியது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆறு வார்டுகளிலும், அ.தி.மு.க வேட்பாளர்கள் ஏழு வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். குன்னூர் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் தி.மு.க 22 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க ஆறு வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலுல் வெற்றிபெற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூடலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க 11 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, காங்கிரஸ் 3, முஸ்லிம் லீக் 1 மற்றும் சுயேச்சைகள் 4 வார்டுகளில் வெற்றிபெற்றனர். நெல்லியாளம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க 13 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1, சுயேச்சை 1 வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்
ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்

அதிகரட்டியில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க 10 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 3, பா.ஜ.க 1, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றன. உலிக்கல்லில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க 13 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 1, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர். கீழ்குந்தாவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க 8 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 1, பா.ஜ.க 1, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றிபெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க 8 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 6, காங்கிரஸ் 1 மற்றும் சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றனர். கோத்தகிரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க 14 வார்டுகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 4, பா.ஜ.க 1, சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றிபெற்றனர். தேவர்சோலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க 7 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.க 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2, காங்கிரஸ் 3, முஸ்லிம் லீக் 2, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றனர். நடுவட்டம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க 8 வார்டுகளில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க 4, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்
ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையம்

பிக்கட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க 8 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.க 1, பா.ஜ.க 2, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றிபெற்றனர். ஜெகதளா பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க வார்டுகளில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க 5, காங்கிரஸ் 1 வார்டுகளில் வெற்றிபெற்றன. ஓவேலி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க 11 வார்டுகளைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1, காங்கிரஸ் 4, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1, சுயேச்சை 1 வார்டுகளில் வெற்றிபெற்றன. சோலூர் பேரூராட்சியிலுள்ள மொத்த 15 வார்டுகளில் தி.மு.க 9, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றிபெற்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism