Published:Updated:

வார்டுக்கு பல லட்சங்கள்... காய்நகர்த்தும் கட்சிகள்! - சூடுபிடிக்கும் வேலூர் மாநகரத் தேர்தல்!

வேலூர் மாநகராட்சி

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் இருவர், தங்கள் மனைவிகளுக்காக வேலூர் மேயர் பதவியை குறிவைக்கிறார்கள்.

வார்டுக்கு பல லட்சங்கள்... காய்நகர்த்தும் கட்சிகள்! - சூடுபிடிக்கும் வேலூர் மாநகரத் தேர்தல்!

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் இருவர், தங்கள் மனைவிகளுக்காக வேலூர் மேயர் பதவியை குறிவைக்கிறார்கள்.

Published:Updated:
வேலூர் மாநகராட்சி

2008-ல் தரம் உயர்த்தப்பட்ட வேலூர் மாநகராட்சி இரண்டாவது முறையாகத் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த முறை பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலூர் மேயர் பதவி, இந்த முறை பெண்கள் பொதுப்பிரிவு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், களத்தில் மோதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து, போட்டி விறுவிறுப்பூட்டுகிறது. மொத்தமிருக்கும் 60 வார்டுகளிலும் செல்வாக்கு உடையவர்களுக்கு மட்டுமே `சீட்’ வழங்க அ.தி.மு.க., தி.மு.க திட்டமிட்டிருக்கின்றன. வார்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவு செய்யும் நபர்களுக்கே இரு கட்சிகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு

அ.தி.மு.க-வைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர் சீட்டுக்கு மூன்று, நான்கு பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களில் மக்கள் செல்வாக்கு, பண பலமுடைய இருவரைத் தேர்வுச் செய்து தலைமைக்குப் பட்டியல் அனுப்பியிருக்கிறார்கள். ஓரிரு நாளில், வேட்பாளர் பட்டியல் வெளிவரவிருக்கிறது.

அதேசமயம், கடந்த முறை வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வளர்ச்சிக்காகச் செலவிட்டுக்கொண்ட முன்னாள் கவுன்சிலர்கள் சிலர் மீண்டும் களமிறங்குகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் வாரிசுகளைக் களமிறக்குகிறார்கள். இது, அ.தி.மு.க-வுக்கு மைனஸாக அமைகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க-வில் அதிகார பலமிக்க புள்ளிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், சட்டமன்றத் தேர்தலின்போதே எம்.எல்.ஏ சீட்டுக்குத் துண்டுவிரித்தார். வாய்ப்பு கைநழுவியதால், இந்த முறை மேயர் பதவியைக் குறிவைத்துத் தன் மனைவியைக் களமிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் நேர்காணலில் விஜய்யும், அவரின் மனைவியும் கலந்துகொள்ளவில்லை. அவரின் மனைவிக்கு கவுன்சிலர் `சீட்’ மறுக்கப்பட்டிருப்பதாகவும் தி.மு.க வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

ஆனாலும், கடைசி நேரத்தில் ஏதாவது காய்நகர்த்தப்போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பூஞ்சோலை சீனிவாசன்
பூஞ்சோலை சீனிவாசன்

தி.மு.க-வைப் பொறுத்தவரை, வேலூர் மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், காட்பாடி வடக்குப் பகுதி பொறுப்பாளர் வன்னிய ராஜா ஆகிய இருவரும் தங்கள் மனைவிகளுக்காக மேயர் பதவியை குறிவைக்கிறார்கள். இருவருமே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் நெருக்கமான ஆதரவாளர்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனிலிருந்துதான் கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அத்துடன் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வார்டுவாரியாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்கான பொறுப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் இருந்தது. இதை வைத்துத்தான் வேலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்துசெய்யப்பட்டது. மீண்டும் அதே `டீம்’ ஒன்று கூடியிருப்பதால் வேலூர் மாமன்றத் தேர்தலிலும் `கரன்சி’ அனல் வீசுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism