Published:Updated:

`1,553 வாக்குச்சாவடிகள்; 14.32 லட்சம் வாக்காளர்கள்!' - வேலூரில் விறுவிறு வாக்குப்பதிவு

லோகேஸ்வரன்.கோ
தினேஷ் ராமையா

வேலூர் மக்களவைத் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, பணப் பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வேலூருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரமும் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

துரைமுருகன், கதிர் ஆனந்த்
துரைமுருகன், கதிர் ஆனந்த்

மொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான 179 மையங்களில் துணை ராணுவப் படையினரோடு கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் வேலூர் எம்.பி யார்? என்பது தெரிந்துவிடும்.

`வாக்களிக்க வரும் மக்களுக்கு பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது. அதற்குப் பதிலாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்' என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடக்கும் தேர்தலில் 14.32 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு 75 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.