Published:Updated:

உ.பி: 10 நாள்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, 20 லட்சம் பேருக்கு அரசு வேலை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு மூன்றாவது தேர்தல் வாக்குறுதி பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 10 நாள்களில் விவசாயக் கடன் தள்ளுபடி" செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

உ.பி: 10 நாள்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, 20 லட்சம் பேருக்கு அரசு வேலை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு மூன்றாவது தேர்தல் வாக்குறுதி பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 10 நாள்களில் விவசாயக் கடன் தள்ளுபடி" செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Published:Updated:
பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளைமுதல் மார்ச் 7-ம் தேதி வரை மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க நேற்று தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பெண்களுக்கு, இளைஞர்களுக்கு எனத் தனித்தனியாக இரண்டு தேர்தல் அறிக்கைகளை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், இன்று மூன்றாவது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

தேர்தல் அறிக்கை வெளியயிட்டு மேடையில் பேசிய பிரியங்கா காந்தி, ``இது மக்களால் கூறப்பட்ட, விரும்பப்பட்ட தேர்தல் அறிக்கை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பத்தே நாள்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பொதுத்துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 12 லட்சம் அரசுப் பணியிடங்களைப் பூர்த்தி செய்து, கூடுதலாக 8 லட்சம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்" என்று தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்களைப் பற்றி பிரியங்கா காந்தி பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism