தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாகக் காய்கறி வியாபாரம் செய்துவந்த தன பாண்டியம்மாள், கொரோனா காலத்தில் 15 டன் தக்காளியை 5,000 குடும்பங்களுக்கு வழங்கி உதவியதாகவும், 500 மேடைக் கலைஞர்கள் குடும்பங்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கியதாகவும் கூறுகிறார்.
இந்த நிலையில், அ.ம.மு.க சார்பாக ராமநாதபுரம் 4-வது வார்டில் போட்டியிட்ட தன பாண்டியம்மாள் வெற்றிபெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ``என்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி. அரசின் திட்டங்களை இந்த மக்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்