Published:Updated:

ராமேஸ்வரம் உள்ளாட்சித் தேர்தல்: கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த திமுக நகரச் செயலாளர்!

தி.மு.க

யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய ஒரேயொரு வார்டில், திடீரென்று தி.மு.க நகரச் செயலாளரே வேட்புமனு தாக்கல் செய்தது அதிர்ச்சியடையவைத்தது.

ராமேஸ்வரம் உள்ளாட்சித் தேர்தல்: கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த திமுக நகரச் செயலாளர்!

யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய ஒரேயொரு வார்டில், திடீரென்று தி.மு.க நகரச் செயலாளரே வேட்புமனு தாக்கல் செய்தது அதிர்ச்சியடையவைத்தது.

Published:Updated:
தி.மு.க

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நகராட்சியில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று வார்டுகள் கேட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு 9-வது வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் கையெழுத்திட்டனர்.

சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்தபோது
சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்தபோது

ஒதுக்கப்பட்ட 9- வது வார்டு வேட்பாளராக ஏ.ஐ.டி.யூ.சி மீனவத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கடந்த 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், சிறிது நேரத்தில் அதே வார்டுக்கு தி.மு.க நகரச் செயலாளரர் நாசர்கான், மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

செந்தில்வேல் - சிபிஐ
செந்தில்வேல் - சிபிஐ

யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய ஒரேயொரு வார்டில், திடீரென்று தி.மு.க நகரச் செயலாளரே வேட்புமனு தாக்கல் செய்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டுமல்ல, ராமேஸ்வரத்திலுள்ள அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டணி தர்மத்தின் ஒப்பந்தத்தை மீறியதால், ஒப்பந்த நகலைக் கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக ராமேஸ்வரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகாரைத் தங்கள் மாநிலத் தலைமைக்குத் தெரிவித்து அவர்கள் மூலம் தி.மு.க தலைமையிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளருடன் நாசர்கான் வேட்பு மனு
மாவட்டச் செயலாளருடன் நாசர்கான் வேட்பு மனு

மேலும், ராமேஸ்வரம் நகராட்சியில் தி.மு.க போட்டியிடும் பெரும்பாலான வார்டுகளில் சீனியர் கட்சிக்காரர்களுக்கு சீட் ஒதுக்காமல், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சிபாரிசு செய்தவர்களுக்கு மட்டும் சீட் வழங்கியதாகவும், மாவட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism