Published:Updated:

`இதுவா எங்கள் கிராமத்தின் பெயர்?!' - தேர்தல் அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராம்நாடு கிராம மக்கள்

160 கிராம உள்ளாட்சித் தலைவர் பதவி மற்றும் 932 வார்டு உறுப்பினர்களுக்கும் 81 ஒன்றிய கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் 8 மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கும் முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.

உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு
உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர்களுக்கான பூத் சிலிப்பில் முகவரியைத் தவறாக அச்சிடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் பூத் சிலிப்
உள்ளாட்சித் தேர்தல் பூத் சிலிப்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 160 கிராம உள்ளாட்சித் தலைவர் பதவி மற்றும் 932 வார்டு உறுப்பினர்களுக்கும், 81 ஒன்றிய கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் 8 மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கும் முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது.

திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள மாயாகுளம் பகுதியில் 911 வாக்காளர்களும், புது மாயாகுளம் பகுதியில் 714 வாக்காளர்களும் உள்ளனர். இந்த நிலையில், இப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் மாயாகுளம் என்பதற்குப் பதிலாக அருந்ததியர் காலனி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பில் வாக்காளர்கள்
தேர்தல் புறக்கணிப்பில் வாக்காளர்கள்

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் மாயாகுளம் பகுதி வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க வருமாறு அழைத்தனர். இதை ஏற்க மறுத்த அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் பகுதியின் பெயரை முகவரியாக தரும் வரை வாக்களிக்க வர மாட்டோம் எனக் கூறியதுடன், வாக்குச் சாவடி மையங்களை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.