Election bannerElection banner
Published:Updated:

`என் மகனை லாரி ஏற்றிக் கொல்லப்பார்த்தார்கள்!’ - மேடையில் கதறியழுத துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

‘‘தேர்தலுக்காக என்னுடைய ஒரே மகனை லாரி ஏற்றிக் கொல்லப் பார்த்தார்கள். அந்தத் துரோகி யாரென்று எனக்குத் தெரியும்’’ எனத் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கண்ணீர் மல்கப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், காந்தி, வில்வநாதன், காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கதிர் ஆனந்த் - துரைமுருகன்
கதிர் ஆனந்த் - துரைமுருகன்

வேட்பாளரும் மகனுமான கதிர் ஆனந்தை அறிமுகம் செய்துவைத்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், ‘‘வேலூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் அணை மற்றும் மோர்தானா அணை, நீதிமன்றங்கள், சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்தது நான். ஆனால், வேலூரிலேயே இல்லாத ஒருவர் வேலூர் மாவட்டத்துக்கு என்ன செய்தேன் எனக் கேள்வி எழுப்புகிறார்.

என்னுடைய வீட்டில் பணத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு வருமானவரித்துறையை அனுப்பியது யார்... எங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது யார்... என்னுடைய ஒரே மகனை லாரி ஏற்றிக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியது யார்?

‘‘வருமானவரித்துறை அதிகாரி ஓய்வுபெற்ற பிறகும் அவரை வேலூர் மக்களவைத் தேர்தலில் செலவு கணக்கைப் பார்க்கத் தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.’’
துரைமுருகன்

அந்தத் துரோகி யாரென்று எனக்குத் தெரியும். ஆனால், பெயரைக் கூறமாட்டேன்’’ என்றுகூறி கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். அவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு கூட்டத்திலிருந்த தொண்டர்களும் கண்கலங்கினர்.

மேலும் அவர் பேசுகையில், "என் வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த வருமானவரித்துறை அதிகாரி ஓய்வுபெற்ற பிறகும் அவரை வேலூர் மக்களவைத் தேர்தலில் செலவு கணக்கைப் பார்க்கத் தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. நான் சொன்னதைச் செய்பவன்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

வேலூருக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். அதேபோல், என்னுடைய மகனும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். அவர் அறிவித்துள்ள திட்டங்களை 6 மாதங்களுக்குள் நிறைவேற்றினால் உச்சிமுகர்ந்து பாராட்டுவேன்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு