Published:Updated:

`இப்போது நினைத்தால்கூட ஆட்சியைக் கலைக்க முடியும்!' - ஸ்டாலின்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

``தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஓட்டு வாங்கியதாகத் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கிறார்கள். தேனி தொகுதியில் நீங்கள் அல்வா’ கொடுத்து வெற்றிபெற்றீர்களா?’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Stalin
Stalin

வேலூர் மக்களவைத் தொகுதி, தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கே.வி.குப்பம் சட்டமன்ற பகுதிகளில் திறந்த வேனில் இன்று மாலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ``பி.ஜே.பி-யிடம் ஏற்கெனவே இந்த ஆட்சி கைகட்டி அடிமையாக இருக்கிறது.

Stalin
Stalin

இந்த ஆட்சிக்கு எடுபிடியாக இருப்பவர்தான் அவர்களின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. மக்களோடு இருக்கிறோம். சுகத் துக்க நிகழ்வுகளில் உரிமையோடு பங்கேற்கிறோம். அந்த உரிமையுடன்தான் உதய சூரியனுக்கு ஒட்டுக்கேட்டு வந்திருக்கிறோம். தேர்தலை நிறுத்தச் சதித்திட்டம் போட்டார்கள். 

37 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஓட்டு வாங்கியதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள். அப்படியென்றால், தேனி தொகுதியில் நீங்கள் அல்வா கொடுத்தீர்களா... துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனைப் பல கோடியைச் செலவழித்துத்தான் தேனியில் வெற்றிபெற வைத்தார்கள். ரெய்டு நடத்தி இந்த ஒரு தொகுதியில் தேர்தலை நிறுத்திவிட்டார்கள். தூத்துக்குடியில் கனிமொழியை சிக்கவைக்கப் பார்த்தார்கள். 

Durai murugan
Durai murugan

அவர்களின் எண்ணத்தில் மண்ணு தான் விழுந்துச்சு. ஏமாந்துபோய்விட்டார்கள். நாங்கள்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். அ.தி.மு.க, பி.ஜே.பி பிரமுகர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கல. இப்போ நினைச்சா கூடா நான் ஆட்சியைக் கலைத்துவிடுவேன். கலைஞர் சொல்லியிருக்கிறார்... கொல்லைப்புறமாக ஆட்சிக் கட்டிலில் அமரக்கூடாது என்று. அதனால், அமைதியாக இருக்கிறோம். ஆட்சியைத் தொடர கப்பம் கட்டுகிறார்கள்.

கலைஞருக்குப் பிடித்த தம்பிகளில் பாசத்தோடும், நிழலாகவும் இருந்தவர் துரைமுருகன். இக்கழகத்துக்காக தொடர்ந்து பணியாற்றக்கூடியவர். இந்த மண்ணின் மைந்தர். சட்டமன்றத்தில் கலைஞருக்கு அடுத்து நீண்ட நெடிய வரலாறு அண்ணன் துரைமுருகனுக்குத்தான் இருக்கிறது. பெருமைக்குரியவர். அண்ணனின் மகனுக்கு ஓட்டுப்போடுங்க. கலைஞரின் மகன் நான். தவறான வாக்குறுதியைக் கொடுக்கமாட்டேன். 

EPS - AC Shanmugam
EPS - AC Shanmugam

அ.தி.மு.க-வினர் மக்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பது நாங்கள்தான். மக்கள் எங்களை நம்புகிறார்கள். வாக்குறுதியைக் கொடுத்தால் இவர்கள் செய்வாங்க என்று நம்புகிறார்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் கூடுதலாக 5 சீட்டு ஜெயித்திருந்தால் எடப்பாடி பழனிசாமியின் கதி முடிந்திருக்கும்’’ என்றார்.