Election bannerElection banner
Published:Updated:

கட்சிகளின் கோரிக்கை முதல் இடைத்தேர்தல் வரை... தலைமை தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்

தலைமை தேர்தல் ஆணையர் - செய்தியாளர் சந்திப்பு
தலைமை தேர்தல் ஆணையர் - செய்தியாளர் சந்திப்பு

``வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,000 என்னும் எண்ணிக்கையிலிருந்து 93,000 என்னும் அளவுக்கு உயர்த்தப்படும்’’ - தலைமை தேர்தல் ஆணையர்.

லிஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தியதுடன் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடனும், கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். தேர்தலின்போது பணப் பட்டுவாடாவைத் தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சுனில் அரோரா, இரண்டு நாள் தமிழக விசிட்டை நிறைவு செய்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த தகவல்களின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்...

சுனில் அரோரா
சுனில் அரோரா
  • தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது!

  • தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

  • வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாள்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

  • பொதுவாகவே தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாகவே இருக்கும். அதை மேலும் அதிகரிக்க புதிய திட்டம்!

  • புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  • கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் தேர்தல் நடப்பதால், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.

  • கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,000 என்னும் எண்ணிக்கையிலிருந்து 93,000 என்னும் அளவில் உயர்த்தப்படும்.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு
  • தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

  • வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்.

  • இரண்டு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

  • தமிழகத்தில் காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு