Published:Updated:

விஜய் மக்கள் இயக்கத்தின் `ஆட்டோ சின்னம்' கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்! - காரணம் இதுதான்!

புஸ்ஸி ஆனந்த்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் `ஆட்டோ சின்னம்' கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்! - காரணம் இதுதான்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றே தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனத் தீவிரம் காட்டிவருகின்றன. அதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளைப்பெற்ற விஜய்யின் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் சின்னம் குறித்து பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், `மக்கள் இயக்க நிர்வாகிகள் வரும் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். தேர்தலில் நம் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்திருக்கிறோம்" என்று பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய் - மக்கள் இயக்கம்
விஜய் - மக்கள் இயக்கம்

இந்த நிலையில், இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த மாநில தேர்தல் ஆணையம், அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை தர மறுத்துவிட்டது. மேலும், விஜய்யின் மக்கள் இயக்கம், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே தேர்தலில் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism