Published:Updated:

`15 வருடங்களுக்குப் பின் ஒதுக்கப்பட்ட சின்னம்!' - தேனி மக்களை ஆச்சர்யப்படுத்திய சுயேச்சை வேட்பாளர்

வேட்பாளர் வள்ளி
வேட்பாளர் வள்ளி

உருளையை உருட்டிக்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை முடிந்து, வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரக் களத்தில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

உருளைச் சின்னம்
உருளைச் சின்னம்

இந்தநிலையில், தேனியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர், தனது சின்னத்தை ஊர் மக்களிடம் அறிமுகப்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vikatan

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது டி.சுப்புலாபுரம் என்கிற கிராமம். இங்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் சுயேச்சை வேட்பாளர் வள்ளி. இவருக்குத் தேர்தல் ஆணையம், கை உருளைச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. முதலில் தனது சின்னத்தின் படத்தைக் காட்டி மக்களிடம் ஓட்டு சேகரித்த வள்ளியிடம், ``இது என்ன சிலிண்டர் மாதிரி இருக்கு.? இதை வைத்து என்ன செய்வார்கள்? எங்க இருக்கு இது? இது பேர் என்ன?” போன்ற கேள்விகள் வந்து விழுந்துள்ளன.

வேட்பாளர் வள்ளி
வேட்பாளர் வள்ளி

இதனால், தனது சின்னத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்க முடியாதோ என்ற அச்சத்தில், கை உருளையைச் செய்து, சாலையில் உருட்டிச் சென்று வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளார் வள்ளி.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வள்ளி, ``இந்தச் சின்னம் 15 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வேட்பாளருக்குக் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் பழைய சின்னம் இது. இந்தக் கை உருளையானது மக்களின் பயன்பாட்டிலிருந்து குறைந்துவிட்டது. பெரிய மைதானத்தில் மட்டுமே இந்தக் கை உருளையைப் பார்க்க முடியும். அப்படி இருக்கையில், சுப்புலாபுரம் கிராம மக்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. உண்மையான கை உருளையை கிராமத்திற்கு கொண்டுவந்துவிட திட்டமிட்டோம்.

`அது எங்கள் சின்னம்; அவர் வெற்றி பெறலாம்!'- சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கியதால் ம.நீ.ம போர்க்கொடி

ஆனால், அதை உருட்டிக்கொண்டு தெருக்களில் செல்வது சற்று சிக்கலானது. அதனால், ரூ.3,000 செலவில், பிளைவுட்டில் உருளை செய்துவிட்டோம். உருளையை உருட்டிக்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். எனது சின்னத்தையும் மறக்க மாட்டார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு