Published:Updated:

`மக்களால் வெல்வேன்!' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திருநங்கை

மக்கள் கேட்டுக்கொண்டதால் ஊராட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட சம்மதித்தேன். மக்களே, என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருநங்கை அழகர்சாமி
திருநங்கை அழகர்சாமி ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சித்தலைவர் பதவிக்கு ஊர் மக்களின் ஆதரவோடு திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

திருநங்கை அழகர்சாமி
திருநங்கை அழகர்சாமி
ஆர்.எம்.முத்துராஜ்

பாலின சமத்துவம் பேச்சளவில் இருந்து வரும் நிலையில், சக பாலினமான திருநங்கைகள் தேர்தல் ஜனநாயகத்தில் ஈடுபட புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். நகரங்களிலேயே இந்த நிலை எனும்போது கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.

ஆனால், எல்லா கிராமங்களும் அப்படி இல்லை என்பதை நிரூபிப்பது போல விருதுநகர் அருகே சின்னபேராளியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (எ) அழகுபட்டாணி என்ற திருநங்கை, பெரிய பேராளி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநங்கை அழகர்சாமி
திருநங்கை அழகர்சாமி
ஆர்.எம்.முத்துராஜ்

இவரை மனு தாக்கல் செய்ய ஊர்க்காரர்கள் உடன் வந்தார்கள். 65 வயதாகும் விவசாயக் கூலியான இவர் மீது ஊர்மக்கள் அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் வற்புறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக அழகர்சாமி என்ற அழகு பட்டாணி கூறுகையில்,``கூலி வேலை செய்து வருகிறேன். என்மீது ஊர் மக்கள் ரொம்ப பாசமாகவும் அன்பாகவும் இருந்து வருகின்றனர். மக்கள் கேட்டுக்கொண்டதால் ஊராட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட சம்மதித்தேன். மக்களே, என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருநங்கை அழகர்சாமி
திருநங்கை அழகர்சாமி
ஆர்.எம்.முத்துராஜ்

தேர்தலில் வெற்றிபெற்றால் எங்கள் ஊருக்குச் சுத்தமான குடிநீரும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவேன்'' என்று இயல்பாகக் கூறினார். திருநங்கை போட்டியிடக் காரணமான கிராம மக்களைப் பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.