Published:Updated:

இரு பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற இரு தம்பதியர்! - நாமக்கல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம்

வெற்றிபெற்ற சோமசேகர், சுகந்தி தம்பதி

நாமக்கல் மாவட்டத்திளூள்ள இரண்டு பேரூராட்சிகளில் போட்டியிட்ட இரு தம்பதியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

இரு பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற இரு தம்பதியர்! - நாமக்கல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம்

நாமக்கல் மாவட்டத்திளூள்ள இரண்டு பேரூராட்சிகளில் போட்டியிட்ட இரு தம்பதியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

Published:Updated:
வெற்றிபெற்ற சோமசேகர், சுகந்தி தம்பதி

நாமக்கல் மாவட்டத்திலுள்ள இரண்டு பேரூராட்சிகளில் போட்டியிட்ட இரண்டு தம்பதியர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 15 வார்டுகளில், வாக்குப்பதிவு நடைபெற்ற 14 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், அவற்றில் 13 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இரண்டு வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். ஏற்கெனவே, பரமத்தி பேரூராட்சியிலுள்ள 13-வது வார்டில் தி.மு.க சார்பில் களமிறங்கிய வேட்பாளர் மணியை எதிர்த்து மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், தி.மு.க வேட்பாளர் மணி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில், 9-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரியும், 12-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் நாச்சிமுத்துவும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாச்சிமுத்துவும் புவனேஸ்வரியும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற சோமசேகர், சுகந்தி தம்பதி
வெற்றி பெற்ற சோமசேகர், சுகந்தி தம்பதி

அதேபோல், நாமக்கல் மாவட்ட, பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தேர்தல் நடப்பதற்கு முன்பே, மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இந்தப் பேரூராட்சியில் போட்டியிட்ட நான்கு தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டமங்கலம் பேரூராட்சியில் உள்ள 7-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க-வைச் சேர்ந்த சிவகாமியும், 10-வது வார்டில் சுகந்தியும், 14-வது வார்டில் முருகனும், 15-வது வார்டில் சோமசேகரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். மீதமுள்ள 11 வார்டுகளுக்குத்தான் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சோமசேகரும், சுகந்தியும் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த 1996, 2001 காலகட்டங்களில் பாண்டமங்கலம் பேரூராட்சின் தலைவராக சோமசேகரும், 2006-ல் அதே பேரூராட்சியின் தலைவராக சுகந்தியும் பதவி வகித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள இரண்டு பேரூராட்சிகளில் போட்டியிட்ட இரு தம்பதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism