Published:Updated:

`நோட்டாவுக்கு `நோ'... மாநில தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும்!’ - வாக்களிக்க மறுத்த அறப்போர் ஜெயராமன்

அறப்போர் ஜெயராமன்

``நோட்டா இல்லாத காரணத்தால், நான் 71 பிரிவைப் பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எனது பூத்தில் பதிவு செய்திருக்கிறேன்” - அறப்போர் ஜெயராமன்

`நோட்டாவுக்கு `நோ'... மாநில தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும்!’ - வாக்களிக்க மறுத்த அறப்போர் ஜெயராமன்

``நோட்டா இல்லாத காரணத்தால், நான் 71 பிரிவைப் பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எனது பூத்தில் பதிவு செய்திருக்கிறேன்” - அறப்போர் ஜெயராமன்

Published:Updated:
அறப்போர் ஜெயராமன்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் (EVM) நோட்டா (NOTA) பட்டன் கிடையாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எனவே, மாநில தேர்தல் ஆணையத்தைக் கண்டிக்கும் வகையில், தேர்தல் விதி பிரிவு 71-ன் படி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், `தான் வாக்களிக்க விரும்பவில்லை' என்பதை மைலாப்பூரில் உள்ள தனது பூத்தில் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு மையம்
வாக்குப்பதிவு மையம்

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் புறக்கணிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்பதை உணர்த்தும் உன்னத ஆயுதம் நோட்டா. அது ரகசியமாக பதிவிடப்படவேண்டும் என்பதும் ஒவ்வொரு வாக்காளரின் உரிமைதான். தேர்தல் விதி 71-ஐ பயன்படுத்துவதில் அந்த ரகசியத்தன்மை பறிபோகிறது. இது வாக்காளர்களுக்கு சமயங்களில் ஆபத்தாக கூட முடியலாம் . தற்போது, நோட்டா இல்லாத காரணத்தால் நான் 71 பிரிவைப் பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எனது பூத்தில் பதிவு செய்திருக்கிறேன்" என கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரையில் பெரிய வார்டுகளில் நோட்டா என்பது எந்த விதியாசத்தையும் ஏற்படுத்தாது . எனினும் சில வார்டுகளில் நோட்டா முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, ஹரியானா போன்ற மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா முதலிடம் பிடித்த வரலாறும் உண்டு. பொதுவாக நோட்டா முன்னிலையில் இருந்தால், அதற்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் முன்னிலையில் இருப்பாரோ அவர் வெற்றியாளராக கருதப்படுவார் . ஆனால் ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் , நோட்டா முன்னிலை பெற்ற வார்டில் மறுதேர்தல் நடத்தப்பட்டது. மேலும்,நோட்டாவுக்கு கீழ் வாக்கு பெற்ற வேட்பாளர்கள் யாருமே மறுதேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் அறிவித்தது ஹரியானா மாநில தேர்தல் ஆணையம்.

அறப்போர் ஜெயராமன்
அறப்போர் ஜெயராமன்

இந்த சம்பவத்தை உதாரணமாக முன்னிறுத்தியே, தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் நோட்டா தேவை என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் அறப்போர் ஜெயராமன். மேலும், நோட்டா என்ற தேர்வு EVM-ல் வைக்காத காரணத்தால், மாநில தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism