Published:Updated:

வேலூர்: `நான் ஜெயிச்சா... என் சமூகத்துக்கே பெருமை!' - திருநங்கைக்கு அங்கீகாரம் கொடுத்த திமுக

திருநங்கை கங்கா

``நான் ஜெயிச்சு வந்தவுடனேயே 63 தெருக்கள்லயும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செஞ்சு தருவேன்’’ என்கிறார் தி.மு.க-வின் திருநங்கை வேட்பாளர் கங்கா.

வேலூர்: `நான் ஜெயிச்சா... என் சமூகத்துக்கே பெருமை!' - திருநங்கைக்கு அங்கீகாரம் கொடுத்த திமுக

``நான் ஜெயிச்சு வந்தவுடனேயே 63 தெருக்கள்லயும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செஞ்சு தருவேன்’’ என்கிறார் தி.மு.க-வின் திருநங்கை வேட்பாளர் கங்கா.

Published:Updated:
திருநங்கை கங்கா

60 வார்டுகளுக்கான வேலூர் மாமன்றத் `தேர்தல் திருவிழா’ களைகட்டியிருக்கிறது. ஓல்டு டவுன் பகுதியை உள்ளடக்கிய 37-வது வார்டில், தி.மு.க சார்பில் கங்கா என்ற திருநங்கை கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பது, பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர், தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளர் என்பது மட்டுமே கங்காவின் பின்னணி.

அப்படியிருக்க, ‘தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?’ என்பது குறித்து திருநங்கை கங்காவிடமே பேசினோம்.

``எனக்கு 49 வயசாகுது. ஓல்டு டவுன் பகுதியிலதான் வீடு இருக்கு. நான்கைந்து தலைமுறையா இங்கதான் வசிக்கிறோம். ஊர் முழுக்க என் சொந்தக்காரங்கதான் அதிகமா இருக்கிறாங்க. பல சமூக மக்களும் இங்க வசிக்கிறாங்க. அவுங்க எல்லாருக்குமே என்னைத் தெரியும்.

வேலூர் மாநகராட்சி அலுவலகம்
வேலூர் மாநகராட்சி அலுவலகம்

என் அப்பா இறந்துட்டாரு. அம்மா மீனாட்சி என்கூட இருக்காங்க. எனக்குக் கல்யாணம் ஆகி 29 வருஷம் ஆகுது. கணவர் பேரு சரவணன். வேலூர்ல இருக்கிற டார்லிங் ஹோட்டல்ல வேலை செய்யுறாரு. என் தம்பியும் இறந்துட்டான். அவனுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்கிறாங்க. ரெண்டு பேரையும் நான்தான் வளர்த்துப் படிக்கவெச்சேன். பையன் மார்க்கெட்டிங் வேலையில இருக்கிறான். பொண்ணை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புல செயலாளர் பொறுப்புல இருக்கிற நான், கலைக்குழுவும் நடத்துறேன். அதுல, 30 திருநங்கைகள், 20 ஆண்கள் இருக்குறாங்க. கோயில் திருவிழாவில் கரகாட்டம், துக்க நிகழ்வில் பறையிசை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமில்லாம... சொந்தமா காளி கோயில் கட்டி பல்வேறு சமூக சேவைகளையும், ஓல்டு டவுன் பகுதியில செஞ்சுக்கிட்டு வர்றேன். கலைஞர் ஐயாதான் மூன்றாம் பாலினத்தவர்களை `திருநங்கை’னு பெயர் வெச்சு பெருமைப்படுத்துனாரு. இப்போ, ஸ்டாலின் ஐயா... எனக்கு வாய்ப்பு வழங்கி, எங்க சமூகத்துக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறாரு. கொரோனா காலத்துல நகர்ப்புறத் தேர்தல் அறிவிச்சு கேன்சலாச்சே... அப்பவே நான் விருப்ப மனு கொடுத்தேன். என் வார்டு... பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பெண் பாலினத் தகுதியிலதான் எனக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறாங்க. என்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற அனைத்து அடையாளச் சான்றிதழ்களிலும் என்னுடைய பாலினம் `பெண்’ என்றே குறிப்பிடச் செஞ்சுருக்கேன்.

கங்கா
கங்கா

அந்த பாஸ்ஸ்போர்ட்டைவெச்சு, சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானத்துல அடிக்கடி போயிட்டு வர்றேன். அந்த நாடுகள்ல இருக்கிற என் சமூகத்தினர் பல பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறாங்க. அவர்களைச் சந்திப்பதற்காகத்தான் அடிக்கடி போயிட்டு வர்றேன்’’ என்றவர், தேர்தல் களப்பணி குறித்தும் பேசத் தொடங்கினார்.

‘‘என்னுடைய வார்டில், 63 தெருக்கள் இருக்குது. அதில் 20 தெருக்கள்லதான் தண்ணி வசதி, ரோடு, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் கொஞ்சம் நல்லாயிருக்கு. நான் ஜெயிச்சு வந்த உடனேயே அடிப்படை வசதிகளை 63 தெருக்கள்லயும் சிறப்பா செஞ்சு தருவேன். கொரோனா காலத்துலேயே, ரெண்டு கட்டமா ரெண்டாயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறி கொடுத்திருக்கிறேன். வருஷா வருஷம் 500 பேருக்கு வேட்டி, சேலை கொடுத்திருக்கிறேன். என் வார்டுல நல்லது கெட்டதுன்னா முதல் ஆளா ஓடிப்போய் நின்னு உதவி செய்யறேன். என் மக்கள் என்னை நம்புறாங்க. என் வீட்டை அடகுவெச்சுதான் செலவுக்குப் பணம் ரெடி பண்ணியிருக்கிறேன். நான் ஜெயிச்சா, என் சமூகத்துக்கே பெருமை. ஜெயிச்சிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்’’ என்றார் நம்பிக்கையோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism