
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். வாக்குப் பதிவின் போது என்ன நடந்தது என்பதை கீழே படிக்கலாம்....
கதிர் ஆனந்த் வெற்றி!
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,84,980 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,76,690 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஏ.சி.சண்முகத்தை விட 8,290 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிக்கனியை பறித்துள்ளார். வெற்றிக்குப் பின் பேசிய துரைமுருகன், ``எந்த ஒரு வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. அதுபோல இந்த வெற்றியும்" எனக் கூறியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மொத்தம் 10,24,352 வாக்குகள்பதிவாகியுள்ளது. தற்போது வரை சுமார் 9 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையிலே வாக்குகள் எண்ண வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் திமுக வின் கதிர் ஆனந்த் 10,441 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் இறுதிகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
முன்னிலை நிலவரம்:
தி.மு.க கூட்டணி - 3,91,573
அ.தி.மு.க கூட்டணி - 3,80,032
(வித்தியாசம் - 11,547)
நாம் தமிழர் - 21,419
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மதிய நேரப்படி 11-வது சுற்றின் முடிவில் 6,07,241 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.
முன்னிலை நிலவரம்!
தி.மு.க கூட்டணி - 2,87,906
அ.தி.மு.க கூட்டணி - 2,75,748
(வித்தியாசம் - 12,158)
நாம் தமிழர் - 12,158
காலை முதலே முன்னிலையில் இருந்து வந்த ஏ.சி. சண்முகத்தை பின்னுக்குத்தள்ளி தற்போது கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றிருக்கிறார். அவர் தற்போது 7,507 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்
சபாஷ் சரியான போட்டி!
சுமார் 15,000 வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்த ஏ.சி. சண்முகம், தற்போதும் முன்னிலையில்தான் இருக்கிறார். ஆனால் சுமார் 3,000 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். நொடிக்கு நொடி கள நிலவரம் மாறிக்கொண்டே வருகிறது.
முன்னிலை நிலவரம்:
அ.தி.மு.க கூட்டணி - 2,40,351
தி.மு.க கூட்டணி - 2,37,189
(வித்தியாசம் - 3,162)
நாம் தமிழர் - 12,560
25 வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா!
வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-வது சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்களில் அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தவிர்த்து மீதமுள்ள 25 வேட்பாளர்கள் நோட்டாவுக்கு கீழ் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.
6-வது சுற்றின் முடிவில் நோட்டாவுக்கு 2,897 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
கடும் போட்டி கொடுக்கும் கதிர் ஆனந்த்!
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். எனினும் கடந்த சுற்றுகளில் சுமார் 15,000 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது முன்னிலை குறைந்துள்ளது.
முன்னிலை நிலவரம்:
அ.தி.மு.க கூட்டணி - 1,98,147
தி.மு.க கூட்டணி - 1,89,851
(வித்தியாசம் - 8,296)
நாம் தமிழர் - 10,046
நோட்டா - 3080
முன்னிலை நிலவரம்!
அ.தி.மு.க கூட்டணி - 1,18,874
தி.மு.க கூட்டணி - 1,05,623
(வித்தியாசம் - 13,251)
நாம் தமிழர் - 5,041
நோட்டா - 2,080
வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரம்:
அ.தி.மு.க கூட்டணி - 85,200
தி.மு.க கூட்டணி - 77,467
நாம் தமிழர் - 3,950
அ.தி.மு.க தொடர்ந்து முன்னிலை!
தற்போதைய நிலவரம்!
அ.தி.மு.க கூட்டணி - 66,962
தி.மு.க கூட்டணி - 62,210
நாம் தமிழர் - 2,791
ஏ.சி.சண்முகம் `ஏறுமுகம்’!
ஏ.சி சண்முகத்துக்கு மீண்டும் ஏறுமுகம் கிடைத்துள்ளது. இரண்டாம் சுற்றில் கதிர் ஆனந்த் முன்னிலையில் பெற்றுவந்த நிலையில், தற்போது மீண்டும் சண்முகம் 2,667 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்!
தற்போதைய நிலவரம்!
அ.தி.மு.க கூட்டணி - 57,511
தி.மு.க கூட்டணி - 54,844
நாம் தமிழர் - 2036
`திடீர்’ ட்விஸ்ட்!
தபால் வாக்குகள் மற்றும் முதலாவது சுற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம், இரண்டாவது சுற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தற்போது தி.மு.க கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,541 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்
தற்போதைய நிலவரம்!
அ.தி.மு.க கூட்டணி - 32,511
தி.மு.க கூட்டணி - 34,052
நாம் தமிழர் - 501
விறு விறு போட்டி!
வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரம்!
அ.தி.மு.க கூட்டணி - 25,544
தி.மு.க கூட்டணி - 24,064
நாம் தமிழர் - 400
தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை!

அ.தி.மு.க கூட்டணி - 4,402
தி.மு.க கூட்டணி - 3,994
நாம் தமிழர் - 400
மும்முனைப் போட்டி
வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி, தி.மு,க கூட்டணி, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ம.நீ.ம, அ.ம.மு.க ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
வாக்குப் பெட்டிகளின்`சீல்’ உடைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணும் பணிதொடங்கியது!
வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியிருக்கிறது. ஓட்டு எண்ணும் பணியில் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் என 324 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த அலுவலர்கள் காலை 6 மணிக்கே ஆஜராகிவிட்டனர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பு 7.30 மணியளவில் `ஸ்ராங்க் ரூம்’ எனும் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டன.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. 71.51 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலைசெய்கிறார்கள்.

சம்பளத்துடன் விடுமுறை கிடைக்காததால் வாக்களிக்க அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. தவிர மழை குறுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் வாக்களிப்பதற்கே ஆர்வம் காட்டவில்லை. இதனால், வாக்கு சதவிகிதம் குறைந்துபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்-பெண் வாக்காளர்கள் ஏறக்குறையச் சமமாக ஓட்டு போட்டுள்ளனர். பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

`சீல்’ உடைக்கப்பட்டு காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் EVM வாக்குகள் எண்ணும் பணி ஒரே நேரத்தில் தொடங்கின. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இரண்டு கட்டடங்களின் மீதும் இரண்டு இடி தாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும். வேலூர் கோட்டையை கைப்பற்றப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் தொகுதி முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.