Published:Updated:

வேலூர் மாநகராட்சி: திமுக வேட்பாளராகக் களமிறங்கிய 2-கே கிட் வெற்றி!

தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கல்லூரி மாணவி மம்தாகுமார்

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய 2கே கிட்டான கல்லூரி மாணவி மம்தாகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றுள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து யார் யார் வெற்றிபெற்றனர் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகிவருகின்றன. இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி தமிழகத்தில் பல்வேறு வார்டுகளில் கல்லூரி மாணவிகள் பலர் சுயேச்சைகளாகவும், அரசியல் கட்சிகளின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கல்லூரி மாணவி மம்தாகுமார்
தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கல்லூரி மாணவி மம்தாகுமார்

இந்த வகையில், வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய 2கே கிட்டான கல்லூரி மாணவி மம்தாகுமார் வெற்றிபெற்றுள்ளார். கலவை ஆதிபராசக்தி கல்லூரியில், பி.எஸ்சி வேளாண்மை நான்காம் ஆண்டு படித்துவரும் மம்தா குமார் இளம் வாக்காளர்களையும் கவர்ந்தார்.

விவசாயக் குடும்பம் என்பதும் அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களைப் பின்னுக்குத் தள்ளி, மம்தாகுமார் மாமன்றத்துக்குச் செல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism