Published:Updated:

`வேலூரில் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்துக்கு சீல்!’ - காரணம் என்ன?

ஸ்டாலின்

ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் ஸ்டாலின் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகக் கூறி அந்தத் திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`வேலூரில் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்துக்கு சீல்!’ - காரணம் என்ன?

ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் ஸ்டாலின் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகக் கூறி அந்தத் திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் ஒட்டுமொத்த அரசியல் இயக்கங்களும் மையம் கொண்டுள்ளன. தேர்தல் பரப்புரையில் தலைவர்கள் மேடைக்கு மேடை உளறிக் கொட்டுகிறார்கள். இந்த நேரத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்திருந்தால் இந்தக் கூத்தை பார்த்து வேதனையடைந்திருப்பார்கள் என்று குமுறுகிறார்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மூத்த நிர்வாகிகள். 

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு இஸ்லாமிய சமூக வாக்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அந்தத் தடைக்கற்களை உடைப்பதற்காக ஏ.சி.சண்முகம் வியூகம் அமைத்திருக்கிறார். ``2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக அப்துல் ரகுமான் களம் கண்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்தில் துரைமுருகன் தன் மகனுக்காக `சீட்’ கேட்டுக் கிடைக்காததால், `இதென்ன தொன்றுதொட்டு முஸ்லிம் தொகுதியா...?' என்று துரைமுருகன் தகராறு செய்தார். கே.வி.குப்பத்தில் அப்துல் ரகுமானை, துரைமுருகனின் ஆட்கள் கொடூரமாகத் தாக்கினர். அந்தத் தேர்தலில் அப்துல் ரகுமான் தோல்வியடைந்தார். 

ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம்
ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

இதற்குக் காரணமான துரைமுருகனுக்கு இஸ்லாமிய மக்கள் இந்த முறை பாடம் புகட்டுவார்கள்'' என்று ஏ.சி.சண்முகம் பேசிவருகிறார். பழைய விவகாரத்தை ஏ.சி.சண்முகம் கிளறிவிட்டுள்ளதால் துரைமுருகன் சற்று தடுமாறியிருக்கிறார். இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கியிருக்கிறார். ஆம்பூரை அடுத்த மேட்டுக்கொல்லையில் 7 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைசெய்யும் பரிதா ஷூ கம்பெனியில் வாக்கு சேகரித்தார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் ஸ்டாலின். இதில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தில், ``37 தொகுதிகளைப் போன்றே வேலூர் தொகுதியிலும் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும் என்று உளவுத்துறை மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம். இந்தப் பகுதியில் நலிவடைந்த தோல் தொழிற்சாலைகளை உயிர்ப்பிக்கத் தேவையான உதவிகளை தி.மு.க செய்யும். நீங்களும் ஆதரவு கொடுங்கள்’’ என்று ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த மண்டபத்தைக் கண்டறிந்த தேர்தல் பறக்கும் படையினர் நோட்டம் பார்த்து விசாரித்தனர். அனுமதி பெறாமல் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதைத் தெரிந்துகொண்ட தேர்தல் பறக்கும் படையினர் உடனடியாக ஆம்பூர் தாசில்தார் சுஜாதாவிடம் புகார் அளித்தனர். அந்த நேரத்தில் தாசில்தார் சுஜாதா, கலெக்டரைச் சந்திக்க வேலூர் சென்றிருந்தார். 

‘சீல்’ வைத்த அதிகாரிகள்
‘சீல்’ வைத்த அதிகாரிகள்

அவர் ஆம்பூர் வருவதற்குள் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கு வந்த தாசில்தார் மண்டபத்தை ஆய்வுசெய்த பிறகு அனுமதி பெறாமல் நடைபெற்ற கூட்டத்துக்கு இடம் அளித்த காரணத்துக்காக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மண்டபத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தார். இதனால், அங்குப் பரபரப்பு காணப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism