Published:Updated:

வேலூர் கோட்டை... தொடருது வேட்டை!

எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்கள், தங்கள் எம்.பி-யை ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்ந்தெடுக்கிறார்கள். அ.தி.மு.க வேட்பாளராகப் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள்.

வேலூர் கோட்டை... தொடருது வேட்டை!

வேலூர் மக்கள், தங்கள் எம்.பி-யை ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்ந்தெடுக்கிறார்கள். அ.தி.மு.க வேட்பாளராகப் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

னநாயகத்தை வெல்ல, ‘ஒரு விரல் புரட்சி’யெல்லாம் நடைபெறப் போவதில்லை. வழக்கம்போல் வைட்டமின் ‘ப’தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இரண்டு தரப்புகளுமே மாறி மாறி வாக்காளர்களுக்கு வைட்டமின் ஊட்டம் தந்தபடி இருக்கின்றன. முதல் ரவுண்டு கவனிப்பு முடிந்து இரண்டாவது ரவுண்டு கவனிப்பு நடந்துகொண்டிருப்பதாக வாக்காளர்களே சொல்கின்றனர்.

அடிதடி, கலவரம் போன்ற விபரீதமான சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை போலீஸார் ‘ரெட் அலர்ட்’ கொடுத் திருந்தனர். அதனால், முன்னெச்சரிக்கையாகக் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன. நல்லவேளையாக, இதுநாள் வரை சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை. அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்ததைப் பார்த்து பொதுமக்களே வியந்துபோயிருக்கிறார்கள்.

ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த்
ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த்

எனினும், ‘‘துரைமுருகன், ஏ.சி.சண்முகம் இருவருமே கூட்டணிக் கட்சியினருக்குப் போதிய மரியாதை வழங்குவதில்லை. மனதைக் காயப்படுத்துவதைப்போல் நடந்துகொள்கிறார்கள். எங்களைத் தள்ளிவைத்தே பார்க்கிறார்கள். பிரசாரப் பொதுக்கூட்ட மேடைகளில் எங்கள் தலைவர்களின் பெயர்களைச் சொல்வதில்லை’’ என்று இருத் தரப்பு கூட்டணிக் கட்சியினரும் குமுறுகிறார்கள்.

ஏ.சி.சண்முகத்தைப் பொறுத்தவரை, தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகளைப் பெறுவதற்காக பா.ம.க-வினரை மட்டுமே தன்னுடன் நெருக்கமாக வைத்திருக்கிறார். இதர சாதிச் சங்கங்களின் ஆதரவைக் கேட்டுப் பெறும் ஏ.சி.சண்முகம், கூட்டணியில் அங்கம்வகிக்கும் பி.ஜே.பி, தே.மு.தி.க., த.மா.கா-வினரைக் கண்டுகொள்வதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க மேல்மட்ட நிர்வாகி ஒருவர், ‘‘ஏ.சி.எஸ் சிலரை நம்பி ஏமாறப்போகிறார். அவருடன் இருப்பவர்களே மறைமுகமாகக் குழிபறிக்கிறார்கள். திட்டமிட்டு, தெளிவாக ஏமாற்றும் நபர்களை நம்பிதான் ஏ.சி.சண்முகம் பல வேலைகளை ஒப்படைக்கிறார். கடந்த முறை நடைபெற்ற பிரசாரத்தின்போதே, அவரை ஏமாற்றிப் பல கோடி ரூபாயை பலர் அமுக்கிக்கொண்டனர். இந்த முறை அதே தவறு நடைபெறக் கூடாது என்று நிர்வாகிகளை அமைச்சர் செங்கோட்டையன் லெப்ஃட் அண்டு ரைட் வாங்கிவிட்டார்’’ என்றார்.

பா.ம.க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏ.சி.எஸ் எங்களுக்கு மரியாதை கொடுக்கிறாரா, இல்லையா என்றெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கைக் காட்ட, அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும். அன்புமணியின் பிரசாரத்தைத் தொடர்ந்து வன்னியர் சமூக வாக்குகள் ஏ.சி.எஸ்-க்கு அதிகமாகவே கிடைக்கும். எங்களுக்கு சின்ன வருத்தம் இருக்கிறது. கடந்த முறை மேடைக்கு மேடை `சின்ன அய்யா’, `பெரிய அய்யா’ என்று புகழாரம் பாடினார் ஏ.சி.எஸ். இந்த முறை ஒரு மேடையிலும் எங்கள் அய்யாக்களின் பெயரை உச்சரிக்கவில்லை. அவரை நேரடியாக அ.தி.மு.க-வும், மறைமுகமாக பி.ஜே.பி-யும் இயக்குகின்றன. அதனால்தான், அவர் தன்னை ‘எம்.ஜி.ஆரின் பக்தன்; ஜெயலலிதாவின் விசுவாசி’ என்று சொல்லி, அனுதாப அலையைத் தேடுகிறார்’’ என்றனர்.

அ.தி.மு.க பிரசாரம், தி.மு.க பிரசாரம்
அ.தி.மு.க பிரசாரம், தி.மு.க பிரசாரம்

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதால், பட்டியலின சமூக மக்களின் வாக்குகள் பெரும்பாலும் கதிர் ஆனந்துக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைப் பிளவுபடுத்தும் நோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு மேடை, ‘‘சபாநாயகர் தனபால் தலித் என்பதாலேயே சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவரைக் கீழே தள்ளி சபாநாயகரின் இருக்கையில் அமர முயற்சி செய்தனர். தலித் மக்களுக்கு எதிரியே தி.மு.க-தான்’’ என்று பேசுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வரின் பேச்சுக்கு முட்டுக்கொடுக்கும்விதமாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘‘தி.மு.க-வில் உள்ள பட்டியலின சமூக நிர்வாகிகள், தொண்டர்களுக்கே பாதுகாப்பில்லை. உதாரணமாக, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் மற்றும் பணிப்பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தகுதியில்லை’’ என்கிறார்.

தி.மு.க கூட்டணியில் புகைச்சலும் காணப்படுகிறது. காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தை கட்சியினர் பிரசாரம் செய்வதற்காக வாகனம் தரும்படி கேட்டிருக் கிறார்கள். அதற்கு, ‘‘உங்கள் சொந்த வாகனத்தைக் கொண்டுவாருங்கள். பெட்ரோல், டீசலுக்கான செலவை மட்டும் கொடுக்கிறோம். எங்களின் வாகனத்தைக் கொடுத்தால் பிரசாரம் செய்யாமல் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்கிறீர்கள். தேவையற்ற செலவு எங்களுக்குத் தான்’’ என்று துரைமுருகன் தரப்பில் கூறியதாகச் சொல்கிறார்கள்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டதற்கு, ‘‘திருவிழா வந்துவிட்டால் பத்து பேருக்குப் பிணக்கு இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திருவிழாவை நிறுத்திவிட முடியுமா? அதைப்போலத்தான் தேர்தலில் சிறுசிறு மனக்கசப்புகள் இருக்கும். அனுசரித்துப்போனால் அனைவருக்கும் நல்லது’’ என்றார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கதிர் ஆனந்த் வெற்றிபெற ஒத்துழைப்புத் தந்து பிரசாரம் செய்கிறோம். பட்டியலின சமூகம், சிறுபான்மையின மக்களுக்கு தி.மு.க எதிரி அல்ல. அப்படியிருந்தால், நாங்கள் அவர்கள் கூட்டணியில் இடம்பெற்றிருக்க மாட்டோம். அ.தி.மு.க கூட்டணி தவறான பிரசாரம் செய்கிறது’’ என்றனர்.

தேர்தல் அரசியலுக்குள் முதல் முறையாக வந்திருக்கும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதற்கும், ஏ.சி.சண்முகம் அரசியலில் நிலைப்பதற்குமான ‘வாழ்வா... சாவா’ கௌரவப் பிரச்னையாக வேலூர் தேர்தல் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘வேலூர் கோட்டையிலும் வேட்டை தொடரும்’ என்று தி.மு.க-வினர் உற்சாகமாக இருக்கின்றனர்.

‘‘என் வெற்றியைத் தடுக்க முடியாது!’’ - கதிர் ஆனந்த்

வேலூர் கோட்டை... தொடருது வேட்டை!

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்திடம் பேசினோம். ‘‘என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க தலைவர்கள், அமைச்சர்களைப்போல் நாங்கள் யாரையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததில்லை. நான் வெற்றி பெற்றால் தமிழகத்துக்கான உரிமைகளை மீட்டெடுப்பேன்.

மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க இழந்துவிட்டது. அவர்கள்மீது வெறுப்பு காட்டுகிறார்கள். என்னை ஆர்ப்பரிக்கும் அன்புடன் மக்கள் வரவேற்கிறார்கள். தி.மு.க-வின் வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். என்னுடைய வெற்றியை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது!’’ என்றார்.

‘‘சிறுபான்மையினர் என்னை ஆதரிக்கிறார்கள்!’’ - ஏ.சி.சண்முகம்

அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திடம் பேசினோம். ‘‘வேலூரில் தி.மு.க-வுக்கான அலை இல்லை. எனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றிருந்தாலே நான்தான் வெற்றிபெற்றிருப்பேன். எதற்கெடுத்தாலும், `அப்பாவைக் கேட்டுச் சொல்கிறேன்’ என்று கதிர் ஆனந்த் சொல்கிறார். தி.மு.க-வில் 30 சதவிகிதம் பேர் கதிர் ஆனந்தை வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக துரைமுருகன் நடந்துகொண்டதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது. தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தாலும், பட்டியலின மக்கள் துரைமுருகனை விரும்பவில்லை. அவர்கள் வந்தால் மிரட்டுவார்கள். சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று நினைக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க அனுதாபிகளைத் தவிர்த்து பொது வாக்காளர்கள்70 சதவிகிதம் பேர் எனக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார்.

‘‘திராவிடமா... தமிழ்த் தேசியமா?’’ - சீமான்

வேலூர் கோட்டை... தொடருது வேட்டை!

ணபலம், படைபலம் மிக்க ஏ.சி.சண்முகம் மற்றும் துரைமுருகனை எதிர்க்கத் தயங்கிக்கொண்டோ என்னவோ, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து சீமான் பிரசாரக் களத்தைத் தெறிக்கவிடுகிறார். ‘‘வேலூரில் மும்முனை போட்டியில்லை. திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான இரு முனை போட்டிதான் நிலவுகிறது. ஒவ்வொரு முறையும் நான் தோற்க வில்லை. மக்கள்தான் தோற்கடிக்கப்படுகின்றனர்’’ என்கிறார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism