Published:Updated:

புதுக்கோட்டை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ்

வெற்றிபெற்ற உற்சாகத்தில், ``மாவட்டத்துல என்னோட வார்டை ஒரு முன்மாதிரி வார்டாக மாத்தணும்" என்கிறார் முகமது பர்வேஸ்.

புதுக்கோட்டை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

வெற்றிபெற்ற உற்சாகத்தில், ``மாவட்டத்துல என்னோட வார்டை ஒரு முன்மாதிரி வார்டாக மாத்தணும்" என்கிறார் முகமது பர்வேஸ்.

Published:Updated:
வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ்

புதுக்கோட்டை மாவட்டம் நகராட்சியிலுள்ள 42 வார்டுகளில், 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறது. நகராட்சியில் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், 6 வார்டுகளில் சுயேச்சைகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி என மொத்தம் 9 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர் முகமது பர்வேஸ் 547 வாக்குகள் பெற்று, 282 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். தி.மு.க-வைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 265 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பர்வேஸின் வெற்றி அறிவிப்பு வந்ததும், சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர், வீட்டுக்குக்கூடச் செல்லாமல் தன்னை வெற்றி பெற வைத்த வார்டு மக்களுக்கு வீடு தேடிச் சென்று நன்றி தெரிவித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ்
வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ்

வெற்றிபெற்ற உற்சாகத்தில் இருந்த பர்வேஸிடம் பேசினோம். ``மொதல்ல, என்னைய நம்பி அதிக வாக்குகள்ல வெற்றி பெறவெச்ச வாக்காளர்களுக்கு உடனே நன்றி சொல்லணும்னு தோணுச்சு. உடனே கிளம்பி வந்துட்டேன். நான் ஓட்டுக் கேட்டு வந்தப்ப மக்கள் எல்லாரும் ரொம்ப வரவேற்பு கொடுத்தாங்க. இப்பவும் அதே வரவேற்பு கொடுக்கிறாங்க. விஜய் அண்ணனோட ஆளா வந்ததுல மக்களுக்குக் கூடுதல் சந்தோஷம். வார்டுக்குள்ள வந்ததுமே குறிப்பா தண்ணீர், பாதாளச் சாக்கடை, வீட்டுமனைப் பட்டா மாதிரியான சில புகார்களைச் சொன்னாங்க. இதையெல்லாம் முதலில் கவனத்தில் எடுத்து அதையெல்லாம் சரி செய்யணும். தண்ணீர் பிரச்னையைப் போக்க நகர்மன்றத்தில் குரல் கொடுப்பேன். அப்படி நகராட்சியிலயிருந்து நடவடிக்கை இல்லைன்னா சொந்தமா வண்டியைவெச்சு மக்களுக்குக் குடிநீர் கொடுப்பேன். மாவட்டத்துல என்னோட வார்டை ஒரு முன்மாதிரி வார்டாக மாத்தணும்" என்கிறார் வெற்றிபெற்ற முகமது பர்வேஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism