Punjab Election Result: காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சோனு சூட் சகோதரிக்குப் பின்னடைவு! | Live Updates

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நிலவரம் என்ன!
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்... முன்னணி நிலவரம்!
பஞ்சாப் தேர்தல்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 77 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்து. தற்போது நடைபெற்றுவரும் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து, மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்திருந்தது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது. ஆம் ஆத்மி தனித்துத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தலைச் சந்தித்துள்ளது. மேலும், இடதுசாரிகளும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பலமுனை போட்டி நிலவுவதால் இம்முறை பஞ்சாப் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சோனு சூட் சகோதரிக்குப் பின்னடைவு!

மோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறங்கிய பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 115 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சி 84 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும் அகாலி தளம் கூட்டணி 8 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய நிலையில் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். காங்கிரஸ் மாநில தலைவர் சித்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் நவ்ஜோத் சிங் சித்து!
பஞ்சாபில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாம் இடம் வகித்து வருகிறது. அந்தக் கட்சியின் ஸ்டார் வேட்பாளர்களான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சரஞ்சித் சிங் சன்னி இருவருமே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

நவ்ஜோத் சிங் சித்து அவர் போட்டியிட்ட தொகுதியில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை... நவ்ஜோத் சிங் பின்னடைவு!
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.
Punjab Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் சுற்றுகள் வாரியாக முன்னணி நிலவரம் தெரியவரும்...
தேர்தல் முடிவுகள்:
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தலில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்...