uttarkhand Election Result: உத்தரகாண்டில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி! | Live upadtes

பெரும் போட்டி நிலவும் உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிலவரம் என்ன!
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்... முன்னணி நிலவரம்!
உத்தரகாண்டில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!
உத்தரகாண்டில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
uttarkhand Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் சுற்றுகள் வாரியாக முன்னணி நிலவரம் தெரியவரும்...
உத்தரகாண்ட் தேர்தல்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 57 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 11 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தனர். பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்று, திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் ஆட்சி அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்றப் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில், 70 இடங்களில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியும் தனித்துத் தேர்தலைச் சந்தித்தது. இந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஹரீஷ் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகள் முதல் இடதுசாரிகள் வரை பலரும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தல் முடிவில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த லைவ் அப்டேட்டில் இணைந்திருங்கள்...