Published:Updated:

பீகார்: `மேஜிக் நம்பர் 122; வெல்லப்போவது யார்?’ - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

பீகாரில் மூன்றுகட்ட வாக்குபதிவுகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. தற்போதைய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் யார் வெற்றியடைய வாய்ப்புள்ளது..?

பீகாரில் தற்போது நடந்துவரும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சி, வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியாவில் கொரோனா பேரிடர் தொடங்கிய காலகட்டத்துக்குப் பிறகு, பீகாரில்தான் முதல் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. 243 சட்டமன்றத் தொகுதிகள்கொண்ட பீகாரில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவிருக்கின்றன. இந்தநிலையில், தேர்தலுக்குப் பிறகு பல்வேறு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

243 சட்டசபைத் தொகுதிகளிலுள்ள பீகாரில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும்.

எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் பின்வருமாறு:

டைம்ஸ் நவ் - சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள்:

ஆர்ஜேடி-காங். கூட்டணி 120 இடங்களை வெல்லும். ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி - 116 இடங்களைப் பிடிக்கும்.

டி.வி 9 பரத்வர்ஸ் எக்ஸிட் போல்:

ஆர்ஜேடி-காங். அணிக்கு 115 - 125 இடங்களிலும், ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி 110-120 இடங்களிலும், லோக் ஜன சக்தி 3-5 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

ரிபப்ளிக் டி.வி:

ஆர்ஜேடி-காங். கூட்டணி 118-138 இடங்களைப் பிடிக்கும். ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி 117 இடங்களைப் பிடிக்கும். லோக் ஜன சக்தி - 5-8 இடங்களைப் பிடிக்கும்.

இந்தியா டுடே ஆக்சிஸ் எக்ஸிட் போல்:

ஆர்ஜேடி-காங். கூட்டணி 139-161 இடங்களிலும், ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி 61-91 இடங்களிலும் வெற்றி பெறும். மேலும் லோக் ஜன சக்தி 3-5 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

ஏபிபி எக்சிட் போல்:

ஆர்ஜேடி-காங். கூட்டணி 108-131 தொகுதிகளையும், ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி 104-128 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

நியூஸ் எக்ஸ் டி.வி எக்ஸிட் போல்:

ஆர்ஜேடி-காங். கூட்டணி 108-123 இடங்களிலும், ஜேடியூ-பா.ஜ.க கூட்டணி 110-117 இடங்களிலும் வெற்றியடையும். லோக் ஜன சக்தி 4-10, மற்ற கட்சிகள் 8-23 இடங்களிலும் வெற்றியடையும் என்று கூறியுள்ளது.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

டுடே சாணக்யா எக்ஸிட் போல்:

ஆர்ஜேடி- காங். அணி 180 இடங்களிலும், ஜேடியூ-பா.ஜ.க 55 இடங்களிலும் வெற்றிபெறும்.

மிகப் பரபரப்பாக நடந்து முடிந்த பீகார் தேர்தலின் எக்ஸிட் போல் கருத்துகள் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன. சில கருத்துக் கணிப்பு முடிவுகள் இரு கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கும் என்பதைக் காட்டியுள்ளன.

கருத்துக் கணிப்பு முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் எந்த அளவுக்கு ஒன்றிப்போகும் என்பதை நாளை மாலை வரை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு