Published:Updated:

`துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டேனா?’- அ.தி.மு.க பிளவுபட்டபோது நடந்ததைக் கூறும் தங்கமணி

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்
பிரபாகரன் செ

‘‘நான் துணை முதல்வர் பதவிக்காக ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. அ.தி.மு.க-வினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க முயற்சிக்கிறது’’ என்கிறார் அமைச்சர் தங்கமணி.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேரணாம்பட்டு பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தங்கமணி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர் பேசுகையில், ‘ இந்த இயக்கம் பிளவுபட்டபோது ஆட்சியைக் கலைக்கவேண்டும்; அம்மாவுக்குத் துரோகம் செய்யவேண்டும் என்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றார்கள்.

இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவதற்காக அன்றைய தினம் முதல்வரின் அனுமதியுடன் நானும் வைத்தியலிங்கமும்தான் அண்ணன் ஓ.பி.எஸ்-சை சந்தித்தோம். அவரிடம், ‘ அம்மா எனக்குப் பின்னாலும் 100 ஆண்டுக்காலம் இந்த ஆட்சியும் கட்சியும் இருக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். 

ஸ்டாலின்
ஸ்டாலின்

நீங்க வாங்க அண்ணா... இணைந்து செயல்படுவோம்' என்று அழைத்துவந்து இயக்கத்தைக் காப்பாற்றினோம். இந்த நிலையில், கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு செய்தியைப்போட்டு ஏதாவது ஆதாயம் பெற முடியுமா என்று தி.மு.க-வினர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

`உணவுக்கு எந்த மதமும் இல்லை!’ - ஆர்டர் செய்த நபரின் கோரிக்கையை நிராகரித்த ஜொமோட்டோ

தி.மு.க-வின் ஆதரவு பத்திரிகைகள் இரண்டு நாள்களாக ‘ நான் என்னமோ துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக’’ பொய்யான செய்தியை வெளியிட்டுவருகின்றன. ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். 

துரைமுருகன்
துரைமுருகன்

அம்மா எனக்கு என்ன பதவி கொடுத்தாரோ... அந்தப் பதவியில் தான் இருந்துகொண்டிருக்கிறேன். வேறு எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவன் இந்தத் தங்கமணி இல்லை. தி.மு.க ஆதரவு பத்திரிகைகள் தொடர்ந்து தவறான தகவலை வெளியிடுகின்றன’ என்றார் ஆவேசத்துடன்.