Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல் செலவுக்கு ரூ.4,809 கோடி தேவை; கடன் கேட்ட நபர் - அதிர்ந்த ரிசர்வ் வங்கி

யோகா ரமேஷ்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருக்கும் ரமேஷ், அதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்க ரூ. 4,809 கோடி கடன் வேண்டும் என்று இந்த முறை ரிசர்வ் வங்கியின் கதவைத் தட்டி, 'தடால் புடால்' செய்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் செலவுக்கு ரூ.4,809 கோடி தேவை; கடன் கேட்ட நபர் - அதிர்ந்த ரிசர்வ் வங்கி

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருக்கும் ரமேஷ், அதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்க ரூ. 4,809 கோடி கடன் வேண்டும் என்று இந்த முறை ரிசர்வ் வங்கியின் கதவைத் தட்டி, 'தடால் புடால்' செய்திருக்கிறார்.

Published:Updated:
யோகா ரமேஷ்

நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்தவர் 'யோகா' ரமேஷ். யோகா கலையைப் பயிற்றுவித்துவரும் இவர், தொடர்ந்து காந்தியக் கொள்கையைப் பரப்பும் வகையில் காந்திபோல உடையணிந்து, கம்பு ஊன்றியபடி செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு, சமூகப் பிரச்னைகளுக்காக வித்தியாசமான முறையில் போராடுவது, மனு அளிப்பது எனச் செயல்பட்டுவருகிறார். சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறங்கிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட இவர், அதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்க 50 கோடி ரூபாய் வரை கடன் வேண்டும் என்று அங்கிருக்கும் வங்கி மேலாளரிடம் மனு கொடுத்து, மொத்த பேங்க்கையும் அதிரவைத்தார்.

ரிசர்வ் வங்கியில் 'யோகா' ரமேஷ்
ரிசர்வ் வங்கியில் 'யோகா' ரமேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரிசர்வ் வங்கியில் 'யோகா' ரமேஷ்
ரிசர்வ் வங்கியில் 'யோகா' ரமேஷ்

தற்போது, இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருக்கும் ரமேஷ், அதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்க ரூ. 4,809 கோடி கடன் வேண்டும் என்று இந்த முறை ரிசர்வ் வங்கியின் கதவைத் தட்டி, 'தடால் புடால்' செய்திருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள ரிசர்வ் வங்கியில், மேற்படி இந்தப் பரபர கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார்.

அந்த மனுவில், ``மேற்கண்ட விலாசத்தில் இந்தியக் குடிமகனாக வசித்துவரும் நான், கடந்த 15.06.2022 அன்று டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உயர்திரு பி.சி.மோடி அவர்களிடம் அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். நான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எனக் குறைந்தபட்சம் 2,405 வாக்குகள் தேவைப்படுகின்றன. ஆகவே, இந்த வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூபாய் 100 கோடி வீதம் அன்பளிப்பு வழங்க வேண்டும். பிரதமர் முதல் முதலமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் என மொத்த வாக்காளர்களான 4,809 பேருக்கும் பாரபட்சமில்லாமல் குறைந்தபட்சமாக ரூ.1 கோடி வீதம் அன்பளிப்பாக வழங்கி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இருக்கிறேன். அதனால், எனக்கு உடனடியாக ரூபாய் 4,809 கோடியை நமது சென்னை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் மானியக் கடனாகவோ அல்லது தள்ளுபடிக் கடனாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 'யோகா' ரமேஷ் கொடுத்த மனு
'யோகா' ரமேஷ் கொடுத்த மனு

மேற்படி வங்கியிலிருந்து வழங்கப்படும் கடனுக்காக இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மாதம்தோறும் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கும் 5 லட்சம் ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுக்கொள்ளாமல், இலவசமாகப் பணியாற்றுவேன் என்ற உத்தரவாதம் அளிக்கிறேன். அதற்காக எனது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணி அட்டை, பாஸ்போர்ட் ஆகிய அனைத்தையும் அசலாக ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துவிடுவேன். இந்த நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற 24 மணி நேரத்தில், மது, போதைப்பொருள், லஞ்சம், ஊழல் இல்லாத இந்தியாவாக மாற்றிவிடுவேன். அதற்காக இந்த முறை நான் கட்டாயம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முயன்றுவருகிறேன். தங்களிடம் உறுதியாக இந்தக் கடன் உதவி தேவைப்படுவதால், நாட்டின் நலன் கருதி நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல முதல் குடிமகனாக முன்மாதிரியாக இருந்து காட்ட மேற்படி ரூபாய் 4,809 கோடியை உடனடிக் கடனாகக் கட்டாயம் வழங்க வேண்டுமென தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து யோகா ரமேஷிடம் பேசினோம். ``நான் காந்தியக் கொள்கையை 15 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் பரப்பிவருகிறேன். பலபேரை காந்திய வழிக்கு மாற்றிக்காட்டியிருக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகள் தேர்தல்தோறும் வாக்காளர்களைப் பணத்தால் ஏமாற்றி, பதவியைப் பெற்றுக்கொண்டு, நாட்டைச் சுரண்டி, பாக்கெட்டை நிரப்பிக்குறாங்க. சாதாரண ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி தொடங்கி, நாட்டின் முதல் குடிமகன் தேர்தலான குடியரசுத் தலைவர் பதவி வரை பணம் விளையாடுது. பணத்தால் மக்களின் வாக்குகளைப் பறித்து, பதவியைப் பெறுபவர்கள், மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையா செய்வார்கள்... சொந்த வீட்டுக்குச் சொத்துகளை வாங்கிக் குவிப்பார்கள். அதனால்தான், இத்தனை வளம் இருந்தும் இந்திய மக்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னும் வறுமைக்கோட்டை தாண்டவே முடியவில்லை.

மனு ரசீது
மனு ரசீது

அதனால், அரசியல்வாதிகள் காட்டும் பணத்தாசையிலிருந்து மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு நேர்மையான தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இப்படித் தேர்தலைச் சந்திக்க கடன் கேட்டு வங்கிகளை அணுகிவருகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தல் என்பதால், இந்த முறை ரிசர்வ் வங்கியில் மனு அளித்திருக்கிறேன். மனுவை வாங்காமல், 'இப்படிப் பண்ணினா, உங்களை அரெஸ்ட் பண்ணிருவோம்'னு சொன்னாங்க. அதுக்கு நான், 'அரெஸ்ட் வேணும்னா பண்ணிக்குங்க. ஆனா, எனக்கு ரூ.4,809 கோடி கடன் வேண்டும்'னு சொல்லவும், மறுபேச்சு பேசாம மனுவை வாங்கிக்கிட்டாங்க. இதன் மூலம், மக்களிடமும் அரசியல்வாதிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.