Published:Updated:

21-வது தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியீடு... காசு குவிக்கும் கட்சிகள்..!

தேர்தல் நன்கொடை
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் நன்கொடை

தேர்தல் நன்கொடை

21-வது தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியீடு... காசு குவிக்கும் கட்சிகள்..!

தேர்தல் நன்கொடை

Published:Updated:
தேர்தல் நன்கொடை
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் நன்கொடை

மத்திய அரசு, தேர்தல் நன்கொடை செலுத்த உதவும் பத்திரங்களை ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை எஸ்.பி.ஐ வங்கி மூலம் தற் போது வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர உதவிடும் வகையில் 2018-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற மார்ச் மாதம் வரை 20 தவணைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது 21-வது முறையாக இந்தத் திட்டம் நடைபெற்று வருகிறது.

 ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

இந்தத் திட்டத்தில் தனிநபர் மற்றும் சிறு, பெரு நிறுவனங்கள் தாம் விருப்பப் பட்ட பத்திரங்களை வாங்க லாம். இந்தப் பத்திரங்களை நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் குறைந்த பட்சம் பதிவான வாக்குகளில் 1% வாங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட எந்தக் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கலாம்.

தற்போது இந்தத் திட்டம் எஸ்.பி.ஐ வங்கி மூலம் மட்டும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. சென்னை உள்பட நாட்டில் உள்ள 29 எஸ்.பி.ஐ வங்கிகளில் இந்தப் பத்திரங்களை வாங்கலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபா யிலிருந்து அதிகபட்சமாக ரூ.1 கோடி ரூபாய் வரை இந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தப் பத்திரங் களை நன்கொடையாக பெற்ற கட்சிகள், ஜூலை 15-ம் தேதிக்குள் தமது கணக்கில் இந்த பத்திரங் களைச் செலுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்ற ஆண்டு நிலவரப் படி, ரூ.3,800 கோடி ரூபாய் அளவுக்குத் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட பத்திரங் களில் 76% பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்தத் திட்டம் பாரதிய ஜனதா கட்சிக்குப் பயனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்று பல எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருந்து இந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டாலும் வெளியிடப்படுகிற மொத்த பத்திரங்களின் மதிப்பில் 94% அதன் அதிகபட்ச வரம்பான ரூ.1 கோடி என்ற அளவில் சென்ற ஆண்டில் வாங்கப் பட்டுள்ளது.

சாமானிய மக்கள் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க உதவும் என்று சொல்லப்பட்டாலும் எந்த சாமானிய மக்களும் ரூ.1 கோடி நன்கொடை வழங்க முடியாது. பெரு நிறுவனங்கள் மட்டுமே தமக்கு பலன் கிடைக்க உதவிடும் வகையில் இதுபோன்ற நன்கொடை களை வழங்கிட முடியும் என்ற குற்றச்சாட்டை இந்தத் திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் முன்வைக் கின்றனர். வெளிப்படைத்தன்மைக்கு உதவிட முடியும் என்று கூறப்பட்டாலும் இந்தப் பத்திரங்களை வாங்குபவர்களின் விவரங்கள் பொதுவெளியில் இல்லாமல் இருப்பது இந்தத் திட்டத்தை சந்தேகப் பார்வையில் வைத்துள்ளது.

21-வது தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியீடு... காசு குவிக்கும் கட்சிகள்..!

மேலும், ஒவ்வோர் ஆண்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகள் நன்கொடை, தேர்தல் நிதிப் பத்திரங்கள், இதர வருமானங்கள் என்று பல பெயர்களில் எங்கிருந்து வருமானம் பெறப்பட்டது என்று குறிப்பிடப்படாமல் பல்லாயிரம் கோடிகளை கணக்கில் காட்டி வருவதும் பெரிய குறைதான்.

இந்த ஆண்டு முடிவில் குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுவாக, தேர்தல் நடைபெறும் காலகட்டங்களில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை கிடைப்பது வாடிக்கையாகும். அதனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 21-வது தேர்தல் நன்கொடை பத்திரங்களில் அதிகபட்சமாக இந்த மாநிலங்களில் நிதி கிடைக்கப் பெறலாம். மேலும் ஜூலை 1-ம் தேதி இந்தக் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் மத்திய அரசு செயல் படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த காலாண்டில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் சென்ற காலாண்டில் வழங்கப்பட்ட வட்டி விகிதங்களே நடப்பு காலாண்டுக்கும் பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் செயல்படும் அரசியல் கட்சிகள் பெரு நிறுவனங்களிடம் இருந்து எக்கச்சக்கமான நன்கொடையைப் பெற்று, அவர்களுக்கு சிலபல தொழில் திட்டங்களைத் தருவதற்குத்தான் இந்தத் தேர்தல் பாண்டுகள் பயன்படும். மாநிலக் கட்சி களுக்கோ, சிறிய அளவில் செயல்படும் தேசியக் கட்சிகளுக்கோ இந்த தேர்தல் பாண்டுகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிறிய தொழில் நிறுவனங் களும் இதனால் எந்த நன்மையும் அடைய முடியாது என்பது நிச்சயம்!