Published:Updated:

“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”
“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”

“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”

பிரீமியம் ஸ்டோரி

“அம்பரப்பர் மலையில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை மதுரையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஆய்வகத்தில் செய்துகாட்டுவோம். மாதிரி நியூட்ரினோ ஆய்வகமான இதனை இந்திய விஞ்ஞானிகளின் மேற்பார்வையில், இந்திய ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இங்கு வந்து பார்த்தால், நியூட்ரினோ பற்றிய அச்சம் தீரும்” என்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தின் திட்ட இயக்குநர் விவேக் தத்தார்.

சமீபத்தில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த விவேக் தத்தார், நியூட்ரினோ திட்டம் குறித்து நிறைய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”

“நியூட்ரினோ திட்டம் பற்றி அச்சப்பட வேண்டியதில்லை என்கிறீர்கள். ஆனால், அதுபற்றிய அச்சம் மக்களிடம் உள்ளதே?”

“ஆமாம். நண்பர் த.வி.வெங்கடேஸ்வரன், தமிழகத்தைப் பற்றிச் சொல்லும்போது, ‘பகுத்தறிவுக்குப் பெயர்பெற்ற மாநிலம் இது. தமிழர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. ஆனாலும், பொய்யான அறிவியல் வாதங்களை முன்வைத்து மக்களைச் சிலர் பயமுறுத்திவைத்துள்ளனர்’ என்பார். இதுதான் என் கருத்தும். மக்களை அச்சுறுத்தாதீர்கள். நியூட்ரினோ திட்டத்தால் நம் நாட்டு மாணவர்கள், இளைஞர்களின் அறிவியல் அறிவு வளரும். அறிவியல் தொழில்நுட்பத்தில் நம்மால் புதிய இலக்கை எட்ட முடியும்.”

“இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அடிப்படை வசதியின்றி அல்லல்படும்போது, ரூ.1,500 கோடி செலவில் இந்தத் திட்டம் தேவையா?”

“முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டுமுயற்சியில் உருவாகும் திட்டம் இது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளில் இருந்து நியூட்ரினோ உணர்கருவிக்குத் தேவையான கண்ணாடிகளையும், குஜராத்தில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து இரும்பும், கோவையில் இருக்கும் நிறுவனங்களில் இதர தொழில்நுட்ப உபகரணங்களும் வாங்கப்படும். இதனால், அந்த நிறுவனங்களின் சர்வதேசத் தரம் அதிகரிக்கும். அம்பரப்பர் மலையைக் குடையும்போது கிடைக்கும் கிரானைட் கற்கள், எம் சாண்ட் ஆகியவற்றை விற்று மாநில அரசு வருவாய் ஈட்ட முடியும். எனவே, பணத்தை இழக்கிறோம் என்ற கோணத்தில் நியூட்ரினோ திட்டத்தைப் பார்ப்பது சரியான அணுகுமுறை இல்லை.”

“அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வகத்திலிருந்து செயற்கை நியூட்ரினோ கற்றைகளைப் பெறப்போவதாகச் சொல்லப்படுகிறதே?”

“இல்லை. பெர்மி ஆய்வகம், செயற்கை நியூட்ரினோ கற்றைகளை வைத்துத் தங்களின் ஆய்வகத்திற்குள் மட்டுமே ஆய்வுசெய்கிறார்கள். அதைப் பொட்டிபுரத்துக்கு கொண்டுவர முடியாது. நாம் பயன்படுத்தப் போவது நம் தயாரிப்பு.”

“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்!”

“25 வருட ஆய்விற்குப் பின்னர், நியூட்ரினோ ஆய்வகத்தில் அணுக்கழிவு கொட்டப்படும் என்று சொல்லப்படுகிறதே?”

“தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நாங்கள் விண்ணப்பித்தபோது, மத்திய அணுசக்தித் துறையின்கீழ் நியூட்ரினோ திட்டம் வருவதாகக் குறிப்பிட்டிருந்தோம். இதைத் தவறாகப் புரிந்துகொண்டு பிழை செய்துவிட்டார்கள். அதனைத் தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளோம். அடிப்படையில், துகள் இயற்பியல் ஆய்வுகள் மத்திய அணு ஆற்றல் சக்தி துறையின் கீழ் உள்ளதால், நாங்கள் அணு ஆராய்ச்சி செய்கிறோம். எந்தக் கதிரியக்கமும் இருக்கக்கூடாது என்பதால்தான், மலையைக் குடைந்து ஆய்வகம் அமைக்கிறோம். நியூட்ரினோ கதிரியக்கமற்ற துகள். அணுக்கழிவு வாதம் பொய்யானது.”

“உங்களின் அடுத்த திட்டம்...”

“பொட்டிபுரம் மக்களைச் சந்தித்து அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவிருக்கிறேன்.”

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு