Published:Updated:

தேசிய தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு! எதற்குத் தெரியுமா?

காற்று மாசு

சென்னைக்கு 181 கோடி ரூபாயும், மதுரைக்கு 31 கோடி ரூபாயும் மற்றும் திருச்சிக்கு 21 கோடி ரூபாயும் ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாட்டுக்கென 233 கோடி தேசிய தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய தூய்மைக் காற்று திட்டமானது காற்று மாசுபட்ட முக்கியமான நகரங்களைத் தேர்ந்தெடுத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 122 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 233 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே.

காற்று மாசு
காற்று மாசு

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த தேசிய தூய்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தவர், சென்னைக்கு 181 கோடி ரூபாயும், மதுரைக்கு 31 கோடி ரூபாயும் மற்றும் திருச்சிக்கு 21 கோடி ரூபாயும் ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாட்டுக்கென 233 கோடி ரூபாய் தேசிய தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism