Published:Updated:

ஓராண்டில் இந்தியாவில் 2,405 பேர் பலி... காலநிலை மாற்றம்தான் காரணமா!?

க.சுபகுணம்

உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் வானிலையில் பல பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வானிலை
வானிலை ( Pixabay )

நேற்று (திங்கள் கிழமை), ராஜ்ய சபா கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பபுல் சுப்ரியோ பேசினார். அதில் சுற்றுச்சூழல் துறையிடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த ஓராண்டில் மட்டுமே தீவிரமான சூழலியல் மாற்றங்களால் 2,405 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பபுல் சுப்ரியோ
பபுல் சுப்ரியோ
விகடன்

கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, "உள்துறை அமைச்சகத்திடமிருந்து கிடைத்த தகவல்களின்படி 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் 2,405 பேர் புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரிடர்களுக்குப் பலியாகியுள்ளது தெரியவருகிறது" என்று கூறினார். உலக வெப்பமயமாதல், இதுபோன்ற பேரிடர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சூரிய மின் சக்தி, ஆற்றல் துறை, தண்ணீர், விவசாயம், நீண்டகாலத் தேவைக்குத் தகுந்தவாறு திட்டமிடுதல், பசுமை இந்தியா, காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகள் என்று இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய போதுமான முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

எட்டுக் கடலோர மாநிலங்களில் பேரிடர்களின்போது ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேசிய புயல் பாதுகாப்புத் திட்டம் அமலாக்கப்படும் என்று பபுல் சுப்ரியோ ராஜ்ய சபாவில் பேசும்போது தெரிவித்தார்.

Vikatan