Published:Updated:

சேகர் ரெட்டி கைதால் வெளிச்சத்துக்கு வந்த மணல் கொள்ளை: ப.சிதம்பரம் புகார்

சேகர் ரெட்டியை கைது செய்ததன் மூலம், மணல் கொள்ளை தமிழக அரசின் முழு பாதுகாப்புடன் நடைபெற்றது என்பது தற்போது முழுமையாக தெரியவந்துள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விலைவாசி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பண மதிப்பு நீக்கம் தான் காரணம். 

புதிய ரூபாய் நோட்டுகள் தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது, மத்திய அரசின் செயலற்ற தன்மை மற்றும் நிர்வாக கோளாறு ஆகியவற்றை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மத்திய அரசு பணமாற்றத்தால், அனைத்து சிறு, குறு தொழில்களும் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து விட்டது.  வளா்ந்த நாடுகளான ஜொ்மனி போன்ற நாடுகளில், 80 சதவீதம் ரொக்க பணவர்த்தனையைதான் நடைபெறுகின்றன. முக்கியமாக, சேகர் ரெட்டியை கைது செய்ததன் மூலம், மணல் கொள்ளை தமிழக அரசின் முழு பாதுகாப்புடன் நடைபெற்றது என்பது தற்போது முழுமையாக தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.