Published:Updated:

ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்
ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்

ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து வருகின்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயத்தை அளிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசு, மாநில அரசிடம் அப்படி ஒரு அறிவிப்பு வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புகள்! சுப.உதயகுமாரன் அதிர்ச்சி தகவல்

 இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் போராட்டக் களத்துக்கு வந்திருந்த சுப.உதயகுமரன், “மோடி அரசு வந்த பிறகு, அரசுக்குச் சொந்தமான கனிம வளங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஹைட்ரோ கார்பன்கள், சின்னச் சின்ன அளவுகளில் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை அரசு கண்டுபிடித்து, அந்த வளமான பகுதிகளைப் பங்கு போட, மோடி தலைமையிலான பாஜக அரசு முயல்கிறது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஏலத்தில் 31 டி.எஸ்.எஃப் எனப்படும் “கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்கள்” தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. இதுநாள் வரை, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள்தான் இதுபோன்ற திட்டங்களைச் செய்து வந்தன. ஆனால், இப்போது தனியார் நிறுவனங்களுக்கு, பொருளாதார ரீதியில் இதுவும் லாபகரமாக இல்லை எனக் காரணம் சொல்கிறார்கள்.

இங்கு அடுத்த 15 ஆண்டுகளில், 40 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவைத் தோண்டி எடுக்கும் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை, வயல்களில் உள்ள எண்ணெய், எரிவாயு, ஷேல் என எது வேண்டுமானாலும், தோண்டி எடுத்துக் கொள்ளலாம். அவற்றுக்கான விலை அனைத்தையும் தனியார் நிறுவனமே தீர்மானிக்கும். ஹைட்ரோ கார்பன்களுக்கான, இந்த ஒப்பந்தங்கள் 23 தனியார் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் 46,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் இந்திய அரசுக்கு  9,600 கோடி ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மக்கள் அவல் கொண்டு வருவார்கள், அனுபவமில்லா கம்பெனிகள் உமி கொண்டு வருவார்கள். இரண்டு பேரும் ஊதி, ஊதித் தின்போம் என்பதின் அடிப்படையில் இத்திட்டம் கொள்ளையடிக்கும் நோக்கோடு செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. இந்தத் திட்டங்கள், அரசுக்கு நெருக்கமான கம்பெனிகளுக்கும், முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, மீத்தேன் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்று அறிவித்த காவிரிப் படுகையை குறிவைத்து, மீண்டும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களும் குறிவைத்து காய் நகர்த்தப்படுகின்றன.

நெடுவாசலில் களம் இறங்கி உள்ள நிறுவனமானது, கர்நாடகாவைச் சேர்ந்த, பாஜக முன்னாள் எம்.பி. கெளதர மல்லிகார்ஜுனப்பாவின் குடும்பத்துக்குச் சொந்த நிறுவனமாகும். இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று பிறகு பி.ஜே.பி.யில் இணைந்தார். இவருக்குப் பிறகு, அவரது மகன் ஜி.எம்.சித்தேஸ்வராவுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, இந்த திட்டம் வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்களைத் தோண்டி எடுக்கும்போது, அவருக்கு இன்னும் பல கோடிகள் கிடைக்கும். நமக்குப் பல கேடுகள் உண்டாகும், விளைநிலங்கள் பாழ்நிலம் ஆகும். நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும். உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். உடல்நலம் கெட்டுப் போகும். செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும். கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும். அதுமட்டுமல்லாமல், ஹைட்ரோ கார்பன், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. 

ஹைட்ரோ கார்பன்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உள்ளது. வளைகுடா நாடுகளில் எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மாதங்கள் வேலையும், இரண்டு மாதங்கள் ஓய்வும் வழங்கப்படுகிறது. இவர்களின் ஆயுட்காலமே குறைந்து போகும் என்பதுதான் உண்மை. நாடெங்கும் நடக்கும் இயற்கை வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரி முனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் தனியாருக்கு சாதகமானவர். ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிப்பு வந்ததும், வாழ்வாதாரங்களை காத்திட நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களைக் கையிலெடுத்துள்ளார்கள். இப்போது தமிழர்கள், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். யாருக்கான “வளர்ச்சி” அம்பானிக்கும், அதானிக்குமான வளர்ச்சியா.

கர்நாடக பி.ஜே.பி எம்.பி.கோடிகளை அள்ளுவதற்காக, தமிழகத்தைத் தியாகம் செய்வோம் என்கிற இவர்கள், ‘கூடங்குளம் அணுக்கழிவுகளை கர்நாடகத்தில் புதைத்து, கர்நாடகா மாநிலத்தை தியாகம் செய்யுங்கள்’ என்று கேட்பார்களா. " இவர்களின் நோக்கம், ஹைட்ரோ கார்பன் மட்டும் எடுக்கும் திட்டமில்லை. பூமியின் மேலடுக்கில் இருக்கும் ஹைட்ரோ கார்பனோடு, டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் குவிந்து கிடக்கும், வளத்தைக் கொள்ளையடித்துவிட்டு, ஹைட்ரோ கார்பனுடன், அதன் பல்லாயிரக்கணக்கான பூமிக்கடியில் இருக்கும் நிலக்கரியை குறி வைத்துத்தான் காய் நகர்த்துகிறார்கள். நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. இப்போதும், எப்போதும் நாம் எச்சரிக்கையோடு இருப்பது நமக்கு நல்லது" என்று அனல் பறக்க பேசினார். 

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு