Published:Updated:

’எண்ணெய் கிணறு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’ :  விவசாயிகள் சங்கம் திட்டவட்டம் 

டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் போராடிய விவசாயிகளுக்கு, நேற்று மாலை திருச்சியில்  பாராட்டு விழா நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தெய்வசிகாமணி, "வறட்சி நிலவும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து கிடக்கிறது. இந்நிலையில் 21 எண்ணெய் கிணறுகள் துவங்க ஆய்வுகள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இதை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் திரும்ப பெற வைப்பார்கள்" என்றார்.

இதற்கிடையே, டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், மீண்டும் வரும் 18 ஆம் தேதி டெல்லி கிளம்புகிறார்கள். அடுத்து 21 ஆம் தேதி  நாடு முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட போராட்டம்  குறித்து முடிவெடுக்க உள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு