Published:Updated:

'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!

'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!
'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!
'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என அதன் திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தடை உத்தரவை அடுத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். ஆந்திரா உட்பட்ட மாநிலங்கள் நியூட்ரினோ திட்டத்தைத் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன', என நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேனியில் அமையவிருந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் கைவிடப்பட்டு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்றியமைக்க பரிசீலிக்கப்பட்டுவருவதாகச் செய்தி வெளியாகியிருந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம், போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அங்கு அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன.

இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே நியூட்ரினோ திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.