Published:Updated:

கட்டப்பட்டு 30 நாள்கள் முடிவதற்குள் இடிக்கப்படும் மணல் அணை சுவர்!

கட்டப்பட்டு 30 நாள்கள் முடிவதற்குள் இடிக்கப்படும் மணல் அணை சுவர்!
News
கட்டப்பட்டு 30 நாள்கள் முடிவதற்குள் இடிக்கப்படும் மணல் அணை சுவர்!

கட்டப்பட்டு 30 நாள்கள் முடிவதற்குள் இடிக்கப்படும் மணல் அணை சுவர்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையோர கிராமம் சின்னப்பாலம். நாட்டுபடகுகள் மூலம் மீன் பிடிப்பதையும், கடலில் இறங்கி பாசி சேகரிப்பதையும் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்கள் நிறைந்த பகுதி. காற்றடி மற்றும் மழைக் காலங்களில் கடல் நீர் பெருக்கெடுத்து கரையோரம் உள்ள மீனவ குடிசைகளுக்குள் குடிகொண்டுவிடும். இதனால் இக்காலங்களில் மீனவர்கள் தங்கள் குழந்தைகளுடன் உண்ண உறங்க இடமின்றி தவிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்தத் தவிப்பைத் தவிர்க்க கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ நிதியில் இருந்து ரூ.43.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

ஆக்ரோஷத்துடன் பொங்கி வரும் கடல் நீரைத் தடுக்கும் வகையில் ஜல்லிகல், சிமென்ட், ஆற்றுமணல் ஆகியவற்றால் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க மதிப்பீடு தயார் ஆனது. மதிப்பீட்டில் குறிபிடப்பட்ட கட்டுமான பொருள்களுக்குப் பதிலாகக் கடற்கரை மணல், சவுட்டு மணல், குறைவான சிமென்ட் ஆகியவற்றைக்கொண்டு 'மணல் தடுப்பு' அமைத்திருக்கிறார்கள். இந்தத் தடுப்பு சுவர் பணிகள் முடிந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் கடற்கரை உப்பு காற்றினாலும், அதன் மீது ஏறி விளையாடும் சிறுவர்களாலும் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே கரைந்து போய் உள்ளன. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடல் நீரைத் தடுக்க கட்டப்பட்ட இந்தத் தடுப்பு சுவர் முறையாகக் கட்டப்படாத நிலையில் அமைச்சர் மணிகண்டனால் கடந்த மாதம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தத் தடுப்புச் சுவரின் தரம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதுக்கு அவரோ, "நல்ல முறையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன் தரம் குறித்து யாரும் புகார் சொல்லவில்லை" என்றார்.

 ஒதுக்குப்புறமாக வாழும் விளிம்பு நிலை மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள். என நினைத்த அதிகாரிகளின் எண்ணத்துக்கு மாறாக சின்னப்பாலம் மக்கள் மணல் அணை கட்டியதில் நடந்த ஊழல்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். ஊடகங்களும் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க மணலால் தடுப்பணை கட்டப்பட்ட காட்சியை வெளிச்சம் போட்டு காட்டின.

இதையடுத்து, உயர் அதிகாரிகள் இந்த மணல் அணை சுவரைப் பார்வையிட்டு அதிர்ந்துபோயினர். உடனடியாக அந்த மண் சுவரைக் கட்டிய ஒப்பந்தக்காரர் மீதும் அவருக்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் தரமான முறையில் மீண்டும் தடுப்புச் சுவர் அமைக்க உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மண் சுவர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அதிலும், மொத்தமுள்ள 590 மீட்டர் நீளத் தடுப்பு சுவரில் இடது புறம்
50 மீட்டர் நீளத்துக்கும், வலது புறத்தில் 250 மீட்டர் நீளத்துக்கும் தரமற்ற பகுதியாகக் கணக்கிட்டு அந்தப் பகுதியை மட்டும் புதிதாகத் தரமான தடுப்பு சுவர் எழுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.

அதே வேளையில், ஏற்கெனவே கட்டப்பட்ட முழு நீள மணல் சுவரையும் இடித்துவிட்டு தரமான சுவரை முழுதாகக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இப்போதாவது அதிகாரிகளும், இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மணிகண்டனும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?