Published:Updated:

மர்ம நபர்கள் கைவரிசை: பத்தே நிமிடத்தில் பல ஆயிரங்களை இழந்த விவசாயி!

மர்ம நபர்கள் கைவரிசை: பத்தே நிமிடத்தில் பல ஆயிரங்களை இழந்த விவசாயி!
மர்ம நபர்கள் கைவரிசை: பத்தே நிமிடத்தில் பல ஆயிரங்களை இழந்த விவசாயி!

மர்ம நபர்கள் கைவரிசை: பத்தே நிமிடத்தில் பல ஆயிரங்களை இழந்த விவசாயி!

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் காலனி பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவேந்திரன். இவரது மகன் மாற்றுத் திறனாளி என்பதால் அவருக்குத் தொழில் தொடங்குவதற்காக ஸ்டேட் பேங்கில் 2 லட்சம் ரூபாய் வரையில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், ’நான் ஸ்டேட் பேங்க் மேனேஜர் பேசுகிறேன். உங்க அக்கவுன்ட்டை அப்டேட் பண்ணச் சொல்லி பல மாதமாகச் சொல்லிகிட்டு இருக்கோம். உங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா?' என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

இதனால் பயந்த தேவேந்திரன் அந்த மர்ம நபரிடம் வங்கி அதிகாரி எனக் கருதி தன் வங்கி விவரங்கள், ஏடிஎம் விவரங்கள் என அத்தனையும் சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே தேவேந்திரனின் வங்கிக்கணக்கிலிருந்து 82 ஆயிரத்து 400 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என செல்போனில் தகவல் வந்துள்ளது. அதன் பின்னர் வங்கியைத் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான், தேவேந்திரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். 

இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்டத்தில் 8 லட்சத்துக்கும் மேல் விவசாயிகள் மற்றும் கூலித்  தொழிலாளிகள் இதுபோன்ற மோசடிக் கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு