Published:Updated:

திருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம்

திருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம்
திருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம்

திருட்டுமணல் விற்பனைக்கும் லாரிகளுக்கும் உடந்தையாக இருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையைக் கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மருதுபாண்டியிடம் பேசும்போது..” சிவகங்கையில் மட்டும் சுமார் 100 லாரிகள் ஓடுகிறது. இந்த லாரிகள் எல்லாம் திருச்சி, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து அரசு அனுமதித்த இரண்டு யூனிட் மணல்களை கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்கிறோம். ஆனால், உள்ளுரிலேயே திருட்டு மணல் நான்கு யூனிட்க்கு மேல் கொண்டுவந்து விற்கிறார்கள். அரசாங்கம் ஒன்பது டன்னுக்கு  மேல் பாரம் ஏற்றக்கூடாது என்கிறது. ஆனால், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகபாரம் ஏற்றி வரும் லாரிகளை அனுமதிக்கின்றனர். திருட்டு மணல் சிவகங்கையில் கொடிகட்டிப் பறக்கிறது. இதையும் தாசில்தார் ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர், போலீஸ் என அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள். 

சிவகங்கையைச் சுற்றி காஞ்சரங்கால், நாட்டரசன்கோட்டை, சாமியார்பட்டி, மேலூர் பைபாஸ், பெருமாள்பட்டி இந்த ஊர்களில் செக்போஸ்ட் இருக்கிறது. இவர்களைத் தாண்டி இவ்வளவு திருட்டு மணல் எப்படி வருகிறது. நாங்கள் இந்த லாரிகளை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகள் படிக்கிறார்கள். நல்லது கெட்டது எல்லாம் இந்த லாரியை வைத்துதான் நம்பியிருக்கிறோம். நாங்கள் மூன்று யூனிட் மணலை 18 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறோம். திருட்டு மணல் மாபியாக்கள் நான்கு யூனிட் மணலை 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.