Published:Updated:

மூவாயிரம் மது பாட்டில்களுடன் அரங்கேறிய பூஜை!

மூவாயிரம் மது பாட்டில்களுடன் அரங்கேறிய பூஜை!
மூவாயிரம் மது பாட்டில்களுடன் அரங்கேறிய பூஜை!

மூவாயிரம் மது பாட்டில்களுடன் அரங்கேறிய பூஜை!

தேனி மாவட்டம், போடி அருகில் உள்ள குச்சனூர் சனீஸ்வரப் பெருமாள் ஆலையத்தின் வளாகத்தில் இருக்கும் காவல் தெய்வம் சோணை கருப்பசாமி. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வாரத்தின் முதல் நாள் இரவு, சோணை கருப்பசாமிக்கு மது பாட்டில்கள் படையல் வைத்து வழிபடுவது வழக்கம். வேண்டுதல் நிறைவேறியதற்காக முதலில் சிறிய அளவில் படைக்கப்பட்ட மது பாட்டில்கள், ஒவ்வொரு ஆண்டும் வரும் மக்கள் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பாட்டில்களாக மாறிவிட்டன. இன்று (ஆகஸ்ட்14) இரவு ஆரம்பித்த பூஜைக்காக பக்தர்கள் படைத்த மது பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தாண்டியது. குவாட்டர், ஆஃப், புல் என வரிசையாக அடுக்கப்பட்ட மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு, சரியாக 9 மணிக்கு கருவறைக்குச் சென்றார் கோயில் பூசாரி. வாயில் துணி கட்டிக்கொண்டு மிகவும் கட்டுப்பாடோடு நடத்தப்படும் பூஜையின்போது, ஒவ்வொரு மது பாட்டில்களாக எடுத்து கருவறையின் ஒரு பகுதியில் இருக்கும் பெருந்துளைக்குள் ஊற்றுவார் பூசாரி.

கிட்டத்தட்ட மூவாயிரம் மது பாட்டில்களும் திறக்கப்பட்டு அந்த பெருந்துளைக்குள் ஊற்றப்படும். அதனைக் கருப்பசாமி ஏற்றுக்கொண்டதாக  கருதப்படுகிறது. ஆண்டின் இந்த ஒரு நாளைத் தவிர மற்ற நாள்களில் அந்த துளை வழியாக தண்ணீர் ஊற்றினால் கூட உள்ளே போகாது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. சுமார் மூவாயிரம் மது பாட்டில்களை கருப்பசாமிக்கு படையல் வைத்தப் பிறகு நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழி பலி கொடுக்கப்பட்டது. அதை உடனடியாக சமைத்து விடிய விடிய கறி விருந்து நடந்தது. பிரமாண்டமாக நடந்த இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

அடுத்த கட்டுரைக்கு