Published:Updated:

”நியூட்ரினோ திட்டம் வேண்டாம்.!” - கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பொட்டிபுரம்

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொட்டிபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டம், தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து நேரும் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

நியூட்ரினோ ஆய்வு திட்ட மாதிரி
நியூட்ரினோ ஆய்வு திட்ட மாதிரி

இது தொடர்பாக நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அதன் விளைவாக, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல், மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவை பெற்ற பிறகே நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முடியும் என தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.

Vikatan

இந்நிலையில், இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டம் எங்கள் கிராமத்திற்கு வேண்டாம் என பொட்டிபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொட்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், “எங்கள் கிராமத்தில் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தக் கூடாது என தீர்மானம் கொண்டுவர வேண்டும் என முன்னரே திட்டமிட்டிருந்தோம்.

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

அதற்கான ஊராட்சிமன்ற பிரதிநிதிகள் இல்லாததால், கடந்த ஆண்டு கோரிக்கை மட்டுமே வைத்தோம். தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது, பொட்டிபுரம் ஊராட்சிமன்றத் தலைவராக செல்வராஜ் மற்றும் துணைத்தலைவராக கருப்பசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை பொட்டிபுரம் ஊராட்சியில் கொண்டுவரக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
அடுத்த கட்டுரைக்கு