Published:Updated:

`10,000 சதுர கி.மீ மழைக்காடுகள் அழிப்பு; தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகள்!’ - ஆபத்தில் அமேசான்

அமேசான் ( AP )

``ஜெய்ர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் காடுகள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.”

`10,000 சதுர கி.மீ மழைக்காடுகள் அழிப்பு; தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகள்!’ - ஆபத்தில் அமேசான்

``ஜெய்ர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் காடுகள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.”

Published:Updated:
அமேசான் ( AP )

உலகின் மிகப்பெரிய காடாக கருதப்படும் அமேசான் எப்போதும் ஆச்சர்யம் அளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்தக் காடு. தனித்துவம் மிக்க பல விஷயங்கள் இந்த அமேசான் காட்டுக்குள் அடங்கியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவது உண்டு. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40 சதவிகிதப் பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா என சுமார் ஒன்பது நாடுகளில் அமேசான் படர்ந்து காணப்படுகிறது. இதில், 60 சதவிகித காடு பிரேசிலில்தான் உள்ளது.

அமேசான்
அமேசான்
AP

பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் இந்த அமேசான் காட்டில் இருந்துதான், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதிகளவில் நன்னீரையும் இந்தக் காடுகள்தான் உலகுக்கு அளிக்கின்றன. இதைத்தவிர, பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் இந்தக் காடுகளில் வசித்து வருகின்றனர். பல அரிய உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இன்னும் ஏராளமான பெருமைகளையும் அற்புதங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் இந்தக் காடு கடந்த சில வருடங்களாக அழிந்து வரும் செய்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக ஜெய்ர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் காடுகள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக செயல்படும் அதிபரின் கொள்கைகளே காடு அழிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் அழிப்பு 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அழிப்பு சதவிகிதத்தை விட மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.என்.பி.இ, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,129 சதுர கி.மீ அளவு காடு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட லெபனான் பகுதியின் அளவுக்கு இணையானதாகும்.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள காடு அழிப்பு விகிதம் 34.4 சதவிகிதம் அதிகம் ஆகும். 2008-ம் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட தரவுகளை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு அதிகளவில் பிரேசிலில் காடு அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காலநிலை மாற்றங்களை தீர்மானிப்பதில் அமேசானின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடை அமேசான் அதிக அளவில் உறிஞ்சுகிறது. அமேசான் அழிக்கப்படுவதால் இவை அனைத்துமே மிகவும் கடுமையாகப் பாதிப்படையும் என்கின்றனர்.

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

2020-ம் ஆண்டில் அமேசான் காடுகளை அழிப்பது இன்னும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால அளவில் காடு அழிக்கப்பட்டதை கடந்த ஆண்டு அதே கால அளவுடன் ஒப்பிடுகையில் சுமார் 55 சதவிகிதம் சட்டவிரோதமான காடு அழிப்பு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு தொடர்பான ஊரடங்கை பயன்படுத்தி அங்கு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் பிரேசில் பகுதியில் உள்ள காடுகளைப் பாதுகாக்க அதிபர் பொல்சனாரோ எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.