Published:Updated:

`உறுதியான ஊதியம், விரைவில் பதவி உயர்வு..!' - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வேட்டைத் தடுப்புக் காவலர்களின் ஊதியம்10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் வனக் காவலர்கள் தங்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் பல காலமாகப் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் சூழல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இன்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசாணை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Sathyamangalam
Sathyamangalam
Twitter

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேட்டைத் தடுப்புக் காவலர்களின் ஊதியம்10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார். அதுமட்டுமன்றி, வனக் காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.