Published:Updated:

`பால்பாயின்ட் பேனாக்களுக்கும் தடை!'- சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகும் குன்னூர்

தூய்மைப் பணியாளர் பார்வதி பாட்டியை குடியரசு தினத்தன்று கொடியேற்றச் செய்து டிரெண்டிங் அடித்த குன்னூர் நகராட்சி அடுத்தகட்டமாக பால்பாயின்ட் பேனாக்களைப் பயன்படுத்தத் தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், தாவரங்கள் உள்ளன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊயிர்ச்சூழல் மண்டலத்தைப் பாதுகாக்க தமிழகம், கேரளம் கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ban plastic
ban plastic

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு நீலகிரி மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விளக்கி வருவதோடு பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தினார். பிளாஸ்டிக் தடையின் உச்சக்கட்டமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் முதல் குளிர்பானங்கள் வரை தடை விதிக்கப்பட்டு வாட்டர் ஏ.டி.எம்-கள் திறக்கப்பட்டன.

ban plastic
ban plastic

இதன் ஒரு படி மேலாக தற்போது பால்பாயின்ட் எனப்படும் பந்துமுனை பேனாக்களாலும் சூழலியல் பாதிப்புகள் ஏற்படுவதை உணர்ந்த குன்னூர் நகராட்சி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் பால்பாயின்ட் பேனா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து குன்னூர் நகராட்சி ஆணையர் பாபு பேசுகையில் ``பிளாஸ்டிக் பால்பாயின்ட் மற்றும் ஜெல் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில், நாள்தோறும் சுமார் 200 கிலோ பேனாக்கள் வரை வீசப்படுகின்றன. இதைத் தடுக்க முதற்கட்டமாக நகராட்சி அலுவலகத்தில் பால்பாயின்ட் பேனாக்கள் பயன்படுத்தத் தடை விதித்து குடியரசு தினத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ban plastic
ban plastic

குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் சங்கம் சார்பில் 130 ஊழியர்களுக்கு பால் பாயின்ட் பேனாக்களுக்கு பதிலாக `பவுண்டன்’ பேனாக்கள் வழங்கப்பட்டன. `இங்க் பாட்டில்களும் நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றார் பெருமிதத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு