Published:Updated:

ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை! எந்தெந்தப் பொருள்களுக்குத் தெரியுமா?

பிளாஸ்டிக் கழிவு

குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருள்களில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், வினியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜூலை, 1-ம் தேதி 2022 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை! எந்தெந்தப் பொருள்களுக்குத் தெரியுமா?

குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருள்களில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், வினியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜூலை, 1-ம் தேதி 2022 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

Published:Updated:
பிளாஸ்டிக் கழிவு

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும் பாதிப்பு உண்டாகிறது. உலகம் முழுவதும் ஆழ்கடல் பரப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-ல் நடைபெற்ற ஐ.நா சபையின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக அளவில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிளாஸ்டிக் கழிவு
பிளாஸ்டிக் கழிவு
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 2022-ல் நடைபெற்ற ஐந்தாவது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டில், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உலக அளவில் நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து உறுப்பு நாடுகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா ஆக்கபூர்வமாகப் பணியாற்றியது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ஐ, 2021 ஆகஸ்ட் 12 அன்று அறிவித்தது. குப்பையில் வீசப்படும் மற்றும் முறையாகக் கையாளப்படாத, பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. அதன்படி குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருள்களில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு 1, ஜூலை 2022 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் குச்சிகளுடன்கூடிய காது குடையும் பஞ்சு, பிளாஸ்டிக் குச்சிகளுடன்கூடிய பலூன்கள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்க்ரீம் குசக்சிகள், அலங்காரத்துக்கான தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் கத்தி, ஸ்பூன், ஃபோர்க், உறிஞ்சுக் குழல், டிரே மற்றும் ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி பேனர்கள் போன்றவை அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்
Pixabay

தடை செய்யப்பட்டபொருள்களை சட்டத்துக்குப் புறம்பாகத் தயாரித்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுவதுடன், மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தடை செய்யப்பட்ட பொருள்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிளாஸ்டிக் தடை பிரச்னையில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறைதீர்ப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தும் வகையில், பிரக்ரித்தி என்ற லோகோ ஒன்றும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய - மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.