Published:Updated:

செம்பரம்பாக்கம் ஏரியும் சில சிக்கல்களும்..?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி ( விகடன் )

செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி இருக்கிறது அரசு...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை என்பது இயற்கையின் கொடைதான். கொசஸ்தலை, அடையாறு, கூவம் என மூன்று ஆறுகள்; அந்த ஆற்றின் நீரை நகரம் முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்க 32 கால்வாய்கள்; நீரைப் பிடித்து வைப்பதற்கான பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் நிலங்கள் என நீர் வளத்திற்கான பல்வேறு ஆதாரத்தைக் கொண்டது சென்னை மாநகரம். ஆனால், ஒவ்வொரு கோடையிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்த பிரச்னைகள் தொடர்ச்சியாக எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்குக் காரணம் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அரசும், மக்களும் முறையாகக் கவனம் செலுத்தாததுதான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவையானது பெரும்பாலும் ஏரிகளைச் சார்ந்துதான் இயங்குகின்றது. அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி என்ற நான்கு ஏரிகளின் வாயிலாகத்தான் தண்ணீர் தேவையானது பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த ஏரிகள் தூர்வாரப்படாத நிலையில்தான் உள்ளன. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரும் பணியைக் கடந்த 11-ம் தேதி தொடங்கி இருக்கிறது மாநில அரசு. 6.303 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒரு மீட்டர் ஆழத்துக்குத் தூர்வாரப்படும் போது 25.30 லட்சம் மணல் லோடு வெளியேற்றப்படும். அதன் மூலம் அரசுக்கு 191.27 கோடி வருமானம் கிடைக்கும் என்றும், இதன் வாயிலாக சுமார் 57 கோடி லிட்டர் தண்ணீரானது சேமிக்கப்படும் என அரசு வெளியிட்டிருக்கும் இந்தக் கணக்குகள்தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் குறித்து, நீர்நிலைகள் சார்பாகத் தொடர்ந்து இயங்கி வரும் அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரிஸ் சுல்தானிடம் பேசினோம், “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மட்டும் 0.5 டி.எம்.சி சவுடு மணல் இருக்கிறது என்பது கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சவுடு மணல் விற்பனை மூலம் அரசுக்கு லாபம் கிடக்கும் என்பது உண்மைதான்.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

போலிக் கணக்கு

ஆனால், இந்த மணலை விற்பனை செய்யும் முறையில்தான் பல சிக்கல்கள் நடந்தேறி வருகின்றன. எவ்வளவு லோடு மணல் விற்பனை செய்யப்படுகின்றது. அவை எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன என்பது தொடர்பான கணக்குகளை முறைப்படி கணக்கிடப்பட வேண்டும். ஆனால் அவை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளைத் தூர்வாருவது தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, இந்த நான்கு ஏரிகளைத் தூர்வாருவதன் மூலம் 1.9 டி.எம்.சி மணல் கிடைக்கும் என அரசுதான் பதிலளித்துள்ளது. இது கிட்டத்தட்ட 190 கோடி யூனிட் மணல் ஆகும். இந்த மணலை ஒரு யூனிட் நூறு ரூபாய்க்கு என வைத்து விற்றால் கூட 1900 கோடி ரூபாய் லாபம் கிடைக்க வேண்டும். ஆனால் 600 கோடி ரூபாய்தான் லாபம் கிடைக்கும் என்கிறது அரசு. இவை முறைப்படுத்தப்பட்டால் அரசுக்கு மேலும் லாபம்தான் கிடைக்கும்.

வருகிறது கிருஷ்ணா தண்ணீர்! - சென்னையில் குழாய் நீர் சப்ளை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பது சார்பாக மெட்ரோ வாட்டர், வனத்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை என ஏழு எட்டுத் துறைகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. ஆனால் இந்த அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.

சென்னைக்குக் குடிநீர் குடிநீர் வழங்கும் இந்த நான்கு ஏரிகள் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் ஏரிகளாகும். இந்த ஏரிகளின் மூலமாகத்தான் சென்னைக்குத் தேவையான குடிநீரானது விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த ஏரிகள் என்பது முழுமையாக வற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் 2017-ம் ஆண்டு இந்த ஏரிகள் என்பது முழுமையாக வற்றியது. தண்ணீர் குறைவாக இருக்கும் போதே அவற்றைத் தூர்வாரினால் இந்தப் பணிகளை எளிமையாகச் செய்து முடித்திருக்க முடியும். போர்க்கால அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் இவற்றைத் தூர்வாரியிருந்தால் கூட நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அரசு அப்போது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இப்போது தூர்வாரும் பணியைத் தொடங்கி பணியை நிறைவு செய்ய 8 ஆண்டுகள் ஆகும் என்கிறது அரசு.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

தூர்வாரும் போது ஏரிகளில் எங்கு வண்டல் மண் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்தத் தூர்வாரும் பணிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவதால் மணலுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத இடங்களில் ஆழமாகத் தோண்டிவிடுகின்றன. இதனால் நீரானது ஏரிகளில் தேங்கி நிற்பதில் சிக்கல் ஏற்படுகின்றது.

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியானது செம்பாரங்கல் பாறை என்கிற பாறைகளால் ஆன நிலப்பரப்பைக் கொண்டது. இந்தப் பாறைகளின் தன்மை என்னவென்றால் அவை தண்ணீரை பூமிக்கு அடியில் போகாமல் தேக்கி வைக்கும். ஆனால் பல தனியார் நிறுவனங்கள் ஏரிகளின் இயல்புத் தன்மையையே சீரழித்து விடுகின்றன.

செய்திருக்கலாம்

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையில் மட்டும் 210 குளங்கள் இருக்கின்றன என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இவை முறையாகத் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்த மொத்தக்குளங்களைத் தூர்வாருவதற்கு 214 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு தேவைப்படுமா என்பதே பெரும் கேள்விக்குறிதான்.

தற்போது தொடங்கியுள்ள செம்பரம்பாக்கம் ஏரிகளைத் தூர்வாரும் பணிகளை மார்ச் மாதமே ஆரம்பித்து இருந்தால் அரசு இந்நேரம் குறைந்தது 200 கோடி லாபம் ஈட்டியிருக்கலாம். இதைப் பயன்படுத்தி அரசு சென்னையில் உள்ள ஏரிகளை தூர்வாரியிருக்கலாம். அதேவேளையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் சிப்காட் கழிவுகள் கலப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன” என்றார் தெளிவாக.

Vikatan

`நீரின்றி அமையாது உலகு' என்பதை அரசும், அதிகாரிகளும் உணர்தல் வேண்டும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு